ஐ.பி.எல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் பி.சி.சி.ஐ க்கு ஏற்பட்டுள்ள இழப்பு எத்தனை கோடி தெரியுமா? – விவரம் இதோ

ipl trophy
- Advertisement -

நடப்பாண்டின் ஐபிஎல் தொடரானது பல்வேறு கொரானா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் இத்தொடரின் பாதியிலேயே சில அணிகளில் உள்ள வீரர்களுக்கு கொரானா தொற்று உறுதியானதையடுத்து, இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரை காலவரையின்றி ஒத்தி வைப்பதாக நேற்று அறிவித்தது. வீரர்களின் நலனில் எந்தவித சமரசத்தையும் ஏற்படுத்திக்கொள்ள பிசிசிஐ விரும்பாததால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப் பூர்வமாக அறிவித்தார் பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா.

இந்த ஐபிஎல் தொடரில் மொத்தம் 60 போட்டிகள் நடைபெற வேண்டும். ஆனால் தற்போது 29 போட்டிகள் மட்டுமே நடந்து முடிந்துள்ள நிலையில் ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பிசிசிஐக்கு ரூபாய் 2000 கோடி அளவிலான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. ஆரம்பத்தில் இந்த வருவாய் இழப்பின் மதிப்பானது ரூபாய் 2000 கோடி முதல் 2500 கோடி வரை இருக்குமென்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சரியாக ரூபாய் 2200 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று தெரிவித்திருக்கிறார் பிசிசிஐ வட்டாரத்தின் மூத்த நிர்வாகி ஒருவர்.

- Advertisement -

இந்த வருவாய் இழப்பானது ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பு செய்ய இயலாமல் போனதாலும், டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பினாலும் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ஐபிஎல் தொடரில் மொத்தம் 60 போட்டிகள் 52 நாட்களில் நடைபெறும் என திட்டம் தீட்டப்பட்டிருந்த நிலையில், தற்போது 24 நாட்களில் 29 போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எப்படி இந்த இழப்பு ஏற்படுகிறது? உதாரணமாக, 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பு செய்யும் உரிமையை பிசிசிஐ இடமிருந்து வாங்கியது ஸ்டார் இந்தியா நிறுவனம். அதன்படி 5 ஆண்டுகளுக்கு ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பு செய்வதால் மொத்தம் 16,347 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட திட்டமிட்டருந்தது ஸ்டார் இந்தியா நிறுவனம்.

Hot-star

இந்த வருவாயானது சராசரியாக ஒரு ஆண்டுக்கு 3269.4 கோடி ரூபாயாகும். ஒரு போட்டிக்கு 54.5 கோடி ரூபாய் என்ற விகிதத்தில், ஒரு தொடரில் நடைபெறும் 60 போட்டிகளையும் ஒளிபரப்பு செய்தால்தான் அந்த நிறுவனத்தால் மேல் சொன்ன வருவாயை ஈட்டமுடியும். ஆனால் இந்த ஆண்டில் 29 போட்டிகளை மட்டுமே ஒளிபரப்பு செய்ததால், அந்த நிறுவனத்திற்கு ரூபாய் 1580 கோடி ரூபாய் வருவாயும், ரூபாய் 1690 கோடி ரூபாய் இழப்பும் ஏற்பட்டிருக்கிறது.

- Advertisement -

மற்றொருபுறம் ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்சராக விளங்கும் விவோ நிறுவனத்துக்கும் மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்று கருதப்படுகிறது. மேலும் வீரர்களுக்கு அளிக்கப்படும் ஊதியத்தாலும் ஒவ்வொரு அணி நிர்வாகமும் சிக்கலை சந்திக்கும் சூழ்நிலையில் இருக்கிறது. ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்காக விளையாடும் வீரர் தனது விருப்பத்தின் பேரில் தொடரை விட்டு விலகினால், அவருடைய பங்களிப்பிற்கு ஏற்றார்போல் அவர்களுக்கு ஊதியத்தை வழங்கி வந்தது ஒவ்வொரு அணி நிர்வாகமும்.

iplstar

ஆனால் தற்போது ஐபிஎல் தொடர் அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டுள்ளதால், அனைத்து வீரர்களுக்கும் ஊதியத்தில் 50 சதவீதத்தை தரும் கட்டாயத்தில், அனைத்து அணி நிர்வாகமும் இருக்கின்றது. நிறுத்தப்பட்டுள்ள ஐபிஎல் தொடர் இந்த ஆண்டில், இனிவரும் ஏதேனும் ஒரு காலகட்டத்தில் நடத்தப்பட்டால் மட்டுமே இந்த பெரும் வருவாய் இழப்பை பிசிசிஐயால் ஈடுகட்ட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement