இந்த ஐ.பி.எல் தொடரை நடத்த இந்த ஒரு வழி மட்டும் தான் இருக்கு – இறுதி முடிவை எடுக்கப்போகும் பி.சி.சி.ஐ

Ganguly
- Advertisement -

பயோ பபுள் பாதுகாப்பு வளையத்தையும் மீறி வீரர்களுக்கு இடையே கொரோனா தொற்று பரவி வருவதன் காரணமாக 14வது ஐபிஎல் தொடரை காலவரையறையின்றி தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது பிசிசிஐ. இந்தத் தொடர் ஆரம்பித்ததிலிருந்து சிறப்பான முறையில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நடத்திவந்த பிசிசிஐ நேற்றுமுன்தினத்தில் இருந்து தொடரை திட்டமிட்டபடி நடத்துவதில் சறுக்கலை சந்தித்தது.

IPL

- Advertisement -

அடுத்தடுத்து வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இத் தொடரை நடத்த முடியாமல் தற்போது ஒத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது. 60 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில் மீதமுள்ள 31 போட்டிகளையும் எப்போது மீண்டும் நடத்துவது என்பது குறித்து பிசிசிஐ ஆலோசித்து வருகிறது.

அந்த வகையில் தற்போது இந்த ஐபிஎல் தொடரை நடத்துவதற்கு ஒரே ஒரு வாய்ப்பு இருப்பதாகவும் அந்த வாய்ப்பு செப்டம்பர் மாதம் தான் இருக்கிறது எனவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடர் முடிந்து டி20 உலக கோப்பை தொடர் ஆரம்பிப்பதற்குள் செப்டம்பர் மாதம் மூன்று வார கால இடைவெளி உள்ளது.

IPL

அந்த இடைவெளியில் மீதமுள்ள 31 போட்டிகளையும் நடத்த வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ உள்ளது. இதனால் பெரும்பாலான போட்டிகள் இரண்டு போட்டிகள் ஆக அமையும் வாய்ப்பு இருக்கிறது.

IPL-1

எது எப்படியிருப்பினும் இருப்பினும் இந்த தொடரில் ஏற்படும் இழப்பை சமாளிக்க பிசிசிஐ அந்த முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதன் காரணமாக மீண்டும் ஐபிஎல் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்ற ஒரு உறுதியற்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement