டி20 உலககோப்பை : இந்திய அணிக்கு புதிய துணைக்கேப்டனாக மாறப்போகும் ஸ்டார் வீரர் – பி.சி.சி.ஐ பிளான்

Hardik Pandya 1
Advertisement

ஆஸ்திரேலியாவில் வருகிற அக்டோபர் 16ஆம் தேதி துவங்க இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்காக தற்போது அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில் இந்திய அணியும் தற்போது ரோகித் சர்மாவின் தலைமையில் பல்வேறு மாற்றங்களை செய்து வீரர்களை பலப்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்த டி20 உலகக் கோப்பை தொடரின் கேப்டனாக ரோஹித் விளையாடுவார் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் துணை கேப்டனாக ராகுல் செயல்படுவார் என்று கூறப்பட்டது.

KL-Rahul

ஆனால் சமீப காலமாகவே காயத்தால் அவதிப்பட்டு வரும் ராகுல் இன்னும் இரண்டு மாதத்திற்குள் நடைபெற இருக்கும் இந்த உலகக்கோப்பை தொடருக்குள் தயாராகுவாரா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இப்படி தொடர்ச்சியாக காயத்தால் அவதிப்பட்டு வரும் கே.எல் ராகுல் உலகக் கோப்பை அணியில் இடம்பெறாமல் போவதற்கும் வாய்ப்புள்ளது.

- Advertisement -

அப்படி அவர் இடம்பெறாமல் போகும் பட்சத்தில் இந்திய அணிக்கு புதிய துணை கேப்டனை அறிவிக்க வேண்டிய அவசியம் ஏற்படும். அந்த வகையில் தற்போது உள்ள டி20 அணிக்கு புதிய துணைக் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

Hardik Pandya 1

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி மற்றும் விராட் கோலியின் தலைமையில் கீழ் நடைபெற்ற சர்வதேச போட்டிகளில் ஆல் ரவுண்டராக அசத்திய ஹார்டிக் பாண்டியா கடந்த சில ஆண்டுகளாக காயத்தால் தனது இடத்தை இழந்து தவித்து வந்த வேளையில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கேப்டனாக சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தார்.

- Advertisement -

அதன் பிறகு இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்த ஹர்திக் பாண்டியா தொடர்ச்சியாக பேட்டிங் மற்றும் பவுலிங் என அனைத்திலும் அசத்தி வருவதால் அவரை இந்த சர்வதேச டி20 உலக கோப்பை தொடருக்காக துணை கேப்டனாக அறிவிக்க பிசிசிஐ விருப்பப்படுகிறது. நிச்சயம் பாண்டியாவின் பங்கு இந்திய அணிக்கு அதிகம் தேவை என்பதால் அவரை துணைக்கேப்டனாக மாற்ற பிசிசிஐ யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க : அன்று ஷூ இல்லாமல் கண்ணீர் விட்ட வீரர், இன்று ஒரே ஓவரில் 34 ரன்கள் விளாசி யுவிக்கு பின் படைத்த வரலாற்று சாதனை – வீடியோ உள்ளே

இதுகுறித்து பேசப்பட்ட ஆலோசனை கூட்டத்தின் போதும் அவரை துணைக்கேப்டனாக மாற்ற பலரின் ஆதரவும் குவிந்து வருவதால் நிச்சயம் பாண்டியா துணைக்கேப்டனாக அறிவிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

Advertisement