இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் டெஸ்ட் தொடரை 2 – 2 என்ற கணக்கில் சமன் செய்தது. குறிப்பாக கடைசிப் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றதை மறக்க முடியாது. அதனால் படுதோல்வியை சந்திக்கும் என்று கணித்த பல முன்னாள் இங்கிலாந்து வீரர்களுக்கு சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி பதிலடி கொடுத்தது.
அடுத்ததாக 2025 ஆசிய கோப்பை செப்டம்பர் 9ஆம் தேதி ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற உள்ளது. அந்தத் தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி களமிறங்க உள்ளது. அதற்கு முன் இந்தியாவின் புகழ்பெற்ற உள்ளூர் டெஸ்ட் தொடரான துலீப் கோப்பை வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி துவங்குகிறது.
லீவ்ல என்ன செய்றாங்க:
அந்தத் தொடரில் விளையாடுவதற்காக வடக்கு மண்டலம் அணி சார்பில் சுப்மன் கில், ஜெய்ஸ்வால், ஷமி, ஆகாஷ் தீப், ஸ்ரேயாஸ் ஐயர், குல்தீப் யாதவ் போன்ற நட்சத்திர வீரர்கள் விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் தென்மண்டல அணியில் விளையாடுவதற்காக கேஎல் ராகுல், முகமது சிராஜ், வாசிங்டன் சுந்தர், சாய் சுதர்சன், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
மத்திய ஒப்பந்தத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத நேரத்தில் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவது அவசியம் என்பது பிசிசிஐ விதிமுறையாகும். அதை தெற்கு மண்டலம் அணி மீறியுள்ளதால் பிசிசிஐ கோபமடைந்துள்ளது. அதனால் ஆசிய கோப்பைக்கு முந்தைய இடைவெளியில் தெற்கு மண்டலத்தின் நட்சத்திர வீரர்கள் துலீப் கோப்பையில் விளையாடாமல் என்ன செய்கிறார்கள்? என்று பிசிசிஐ கேள்வி எழுப்பியுள்ளது.
பிசிசிஐ கட்டளை:
மேலும் இங்கிலாந்து தொடருக்கு பின் போதுமான ஓய்வு கிடைத்து விட்டதால் அந்த வீரர்களை துலீப் கோப்பையில் விளையாட வைக்குமாறு தெற்கு மண்டல அணியின் நிர்வாகத்திற்கு பிசிசிஐ கடிதம் எழுதியுள்ளது. இது பற்றி பிசிசிஐ கிரிக்கெட் நடவடிக்கைகளின் பொது மேலாளர் அபே குருவில்லா தெற்கு மண்டலம் அணிக்கு எழுதியுள்ள கடிதம் பின்வருமாறு. “துலீப் கோப்பையின் கௌரவத்தை நிலை நிறுத்துவது அவசியம்”
இதையும் படிங்க: என்னது ரோஹித்துக்கு பின் ஸ்ரேயாஸ் ஐயர் ஒன்டே கேப்டனா? சொல்லவே இல்ல.. பிசிசிஐ செயலாளர் பேட்டி
“அந்தப் போட்டியின் மிக உயர்ந்த தரத்தை உறுதி செய்வதற்கு தற்போது இருக்கும் அனைத்து இந்திய வீரர்களும் அந்தந்த மண்டல அணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவது கட்டாயமாகும். எனவே துலீப் கோப்பையில் விளையாட உள்ள அனைத்து இந்திய வீரர்களும் தேர்வு செய்யப்படுவதை உறுதி செய்யுமாறு மண்டல கன்வீரர்களை கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்



