ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் கழற்றி விடப்பட்டார். ஐபிஎல் 2024 கோப்பையை கேப்டனாக வென்ற அவர் 2025 சீசனில் பஞ்சாப்பை 11 வருடங்கள் கழித்து இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். அதற்கு முன் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் அதிக ரன்கள் அடித்த அவர் இந்தியா கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார்.
2025 ஐபிஎல் தொடரில் 604 ரன்களை 175 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசிய அவர் நல்ல ஃபார்மில் இருக்கிறார். அதனால் இந்திய டி20 அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் துணை கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித்தை கழற்றி விட்ட பிசிசிஐ சுப்மன் கில்லை புதிய கேப்டனாக அறிவித்தது.
சொல்லவே இல்ல:
அந்த வாய்ப்பில் இங்கிலாந்தில் 754 ரன்கள் அடித்த அவர் இந்தியா தொடரை சமன் செய்ய உதவினார். ஒருநாள் கிரிக்கெட்டில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கும் அவர் ஏற்கனவே துணை கேப்டனாக இருக்கிறார். அதனால் டி20 கிரிக்கெட்டிலும் கில்லை வருங்கால கேப்டனாக வளர்க்க நினைக்கும் பிசிசிஐ இப்போதே துணைக் கேப்டனாக அறிவித்துள்ளது.
இதற்கிடையே ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மாவுக்கு பின் ஸ்ரேயாஸ் ஐயரை கேப்டனாக தேர்ந்தெடுக்க பிசிசிஐ விரும்புவதாக நேற்று செய்திகள் வெளியானது. குறிப்பாக சுப்மன் கில்லை விட அனுபவத்தைக் கொண்டுள்ள ஸ்ரேயாஸ் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வெல்ல முக்கிய பங்காற்றினார். எனவே ஒருநாள் கிரிக்கெட்டில் துருப்புச்சீட்டாக கருதப்படும் அவரை பிசிசிஐ அடுத்த கேப்டனாக்க விரும்புவதாக செய்திகள் தெரிவித்தன
பிசிசிஐ செயலாளர் மறுப்பு:
இந்நிலையில் என்னது ஸ்ரேயாஸ் அடுத்த கேப்டனா? சொல்லவே இல்ல என்ற வகையில் பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைக்கியா தெரிவித்துள்ளார். ஏனெனில் அந்த தகவல் நீங்கள் சொல்லித்தான் எனக்கே தெரியும் என்று அவர் செய்தியாளர்களிடம் பதிலளித்துள்ளார். இது பற்றி ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளது பின்வருமாறு.
இதையும் படிங்க: 38/4 டூ 168/4.. 45 பந்தில் 100.. என்னயா ஆசிய கோப்பையில் குறைச்சு பேசுறீங்க.. ரிங்கு சிங் மாஸ் கம்பேக் பதிலடி
“அது எனக்கும் செய்தியாக கிடைத்துள்ளது. நீங்கள் சொல்வது போல் ஒருநாள் கேப்டன்ஷிப் குறித்து எந்த விவாதத்தையும் நாங்கள் நடத்தவில்லை” என்று கூறினார். அது பற்றி மற்றொரு பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ நிர்வாகி கூறியது பின்வருமாறு. “ஒருநாள் கிரிக்கெட்டில் 59 என்ற சிறந்த சராசரியை வைத்துள்ள சுப்மன் கில் ஏற்கனவே துணை கேப்டனாக இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த வயதிலேயே வெற்றிகரமாகத் துவங்கியுள்ள அவர் நேரம் வரும் போது ஒருநாள் போட்டிகளின் கேப்டன்ஷிப் பதவியை எடுத்துக்கொள்ளாமல் இருப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை” எனக் கூறினார்.



