இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகின்றன. இந்த தொடருக்கான வரவேற்பு இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலக அளவிலும் அதிக அளவில் கிடைப்பதால் ஆண்டுதோறும் கோலாகலமாக நடத்தப்படுகிறது. இந்நிலையில் தற்போது பதிமூன்றாவது சீசனாக இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி துவங்க இருந்த ஐபிஎல் தொடரானது கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு நடைபெற இருந்த ஐ.பி.எல் தொடர் ஏற்கனவே இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்டு தற்போது காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இந்த தொடரை நடத்தா விட்டால் பிசிசிஐக்கு 4,000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என்ற காரணத்தினால் எப்படியாவது ஒரு வாய்ப்பினை பயன்படுத்தி இந்த தொடரை நடத்த வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் உள்ளது.
இந்நிலையில் இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய கிரிக்கெட் நிர்வாகங்கள் ஐபிஎல் தொடரை தாங்கள் நடத்த தயாராக இருக்கிறோம் என்று நேரடியாக பிசிசிஐக்கு வேண்டுகோள் விடுத்தது. ஆனால் இவ்விரு கிரிக்கெட் நிர்வாகங்களுக்கும் பிசிசிஐ எந்தவித பதிலும் தெரிவிக்காமல் மௌனமாக உள்ளது.

ஆனால் ஏற்கனவே ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் ஐபிஎல் போட்டிகளை பிசிசிஐ நடத்தி உள்ளதால் இம்முறை அந்நாட்டில் நடத்த வாய்ப்புள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் நினைக்கின்றது. ஆனால் இதுவரை பிசிசிஐ இந்த முடிவு குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் அவர்கள் இத்தொடரை நடத்த தயாராக உள்ளனர்.
இருப்பினும் இந்த விவகாரம் குறித்து பிசிசிஐ மௌனம் வருகிறது. எனவே அவர்களும் இத்தொடரை நடத்துவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை பிசிசிஐ வெளிநாட்டில் இத் தொடரை நடத்த வேண்டும் ஆயின் இந்திய அரசின் அனுமதியை பெற வேண்டும். அப்படி பெற்றால் மட்டுமே இங்கிருந்து வீரர்கள் அங்கு செல்ல முடியும்.

அதுமட்டுமின்றி மேலும் பல்வேறு நாடுகளின் வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பிசிசிஐ அமைதி காத்து வருகிறது. இதனால் ஐபிஎல் குறித்த எந்த ஒரு உறுதியான தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



