ஏற்கனவே ஐ.பி.எல் தொடர்கள் மும்பைக்கு சாதகம்னு சொல்றாங்க. அதுல இப்போ இது வேறயா ? – விவரம் இதோ

IPL-1
- Advertisement -

ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19-ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது .அதற்காக பெரும் பொருட் செலவில் துபாய், அபுதாபி ஆகிய மைதானங்களில் வாடகைக்கு எடுக்கப்பட்டு நடத்தப்பட உள்ளது . மேலும் வீரர்கள் ஊழியர்கள் பயிற்சியாளர்கள் என அனைவரும் ஒன்றாக பாதுகாப்பு வளையத்திற்குள் தங்குவதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது.

ipl

- Advertisement -

இப்படி செலவு செய்யப் படுவதால் வழக்கத்தைவிட இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அதிக செலவாகும். இதன் காரணமாக பிசிசிஐ தனது ஸ்பான்சர்களிடம் தற்போது கறார் காட்டத் துவங்கியுள்ளது. இந்நிலையில் சீன நிறுவனமான விவோ மொபைல் நிறுவனம் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் என்னும் தகுதியில் இருந்து தானே நீக்கிக் கொண்டது.
.
இதன் காரணமாக புதிய டைட்டில் ஸ்பான்சர் ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது. யார் வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால் அமேசான் நிறுவனம் 400 கோடி ரூபாய் கொடுக்க முன்வந்துள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக குறைந்தது இந்த வருடம் எந்த நிறுவனம் 300 கோடி கொடுக்கிறதோ.
அந்த நிறுவனத்திற்கு தான் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் என்று அறிவித்துள்ளது பிசிசிஐ.

Ipl cup

தற்போது காலியாக உள்ள இந்த இடத்தை பிடிப்பதற்கு அமேசான், பைஜூஸ், ட்ரீம் லெவன், பதஞ்சலி ஆகிய நிறுவனங்கள் போட்டியில் இருப்பதாக கூறப்படுகிறது பொருத்திருந்து பார்ப்போம் . எந்த நிறுவனம் டைட்டில் ஸ்பான்சர் பெறுகிறது என்பதை.

அப்படி ஸ்பான்சர் கொடுக்க முன்வரும் நிறுவனம் தொகையை குறைத்து கிடைக்குமாயின் ஒரு நிறுவனத்தை ஸ்பான்சர் ஆகவும் மேலும் இரண்டு நிறுவனத்தை பார்ட்னராகவும் சேர்த்து அந்த 440 கோடி ரூபாய் மதிப்பீட்டினை ஈடுகட்டும் வகையில் பிசிசிஐ ஒரு திட்டம் வைத்துள்ளது. இதில் புதிதாக தற்போது ஜியோ நிறுவனமும் இணைந்து உள்ளதால் அவர்கள் பெரிய தொகை கொடுத்து இந்த டைட்டிலை பெற வாய்ப்புள்ளதாக பரவலாக பேசப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஜியோ நிறுவனத்தை சேர்ந்த அம்பானி குடும்பத்தார் தான் மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளராக இருக்கின்றனர். ஏற்கனவே நடந்து முடிந்த பல தொடர்களில் மும்பை அணி காசு கொடுத்து கோப்பையை வென்று விட்டதாக வதந்திகள் வந்து கொண்டிருக்கும் வேளையில் தற்போது முழு ஸ்பான்ஷிப்பையும் பெற்றால் அவர்களே சூதாட்டம் செய்வார்கள் என்பது போல ரசிகர்களின் மத்தியில் பேச்சு எழத்துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement