- Advertisement -
இந்திய கிரிக்கெட்

வங்கதேச அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான பயிற்சி முகாமுக்கு நீங்க வரனும்.. புதிய வீரரை அழைத்த பி.சி.சி.ஐ – யார் இவர்?

அண்மையில் இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பிய இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஒரு மாத கால ஓய்வில் உள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் அனுபவ வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா மற்றும் அஸ்வின் ஆகியோரை தவிர்த்து மற்ற அனைத்து இந்திய வீரர்களும் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான துலீப் டிராபி தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

பயிற்சிக்கு வரும் அடுத்த அஷ்வின் :

அதனைத்தொடர்ந்து இம்மாதம் வங்கதேச அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செப்டம்பர் 19-ஆம் தேதி துவங்க இருக்கிறது.

- Advertisement -

அதற்கு முன்னதாக செப்டம்பர் 13 முதல் 18 வரை சென்னையில் இந்திய முதன்மை அணி வீரர்கள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு தயாராக பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்த இந்திய அணியின் பயிற்சி முகாமிற்கு இந்திய அணியுடன் சேர்த்து இளம் வீரரான ஹிமான்ஷூ சிங் என்பவரை பயிற்சியில் பங்கேற்குமாறு பிசிசிஐ அழைப்பு விடுத்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த ஆபி ஸ்பின்னரான இவர் ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற அச்சரசலாக பந்து வீசுவதாலேயே அவரை இந்திய அணி நிர்வாகம் அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. தனது கரியரின் கடைசி கட்டத்தில் இருக்கும் அஸ்வினுக்கு பதிலாக சரியான மாற்று வீரரை கொண்டு வருவதற்காகவே அந்த இளம் வீரரை பிசிசிஐ அழைத்துள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

மும்பையை சேர்ந்த இளம் வீரரான ஹிமான்ஷூ சிங் 6 அடி 7 அங்குலம் உயரம் உடையவர்.. அதிக உயரம் உள்ள அவரால் பந்தை அதிகளவு ஸ்பின் செய்ய முடிகிறது. மேலும் அவரது பௌலிங் ஆக்சன் அஸ்வின் போன்றே இருப்பதினால் அவரை மெருகேற்றி இந்திய அணிக்குள் கொண்டுவர பிசிசிஐ யோசித்துள்ளது.

இதையும் படிங்க : அப்படின்னா அவுட்டாகுங்க.. குல்தீப் யதாவை கலாய்த்து.. கில் அணிக்குள் புகுந்து திட்டத்தை கேட்ட ரிஷப் பண்ட்

அதன் காரணமாகவே இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகமான பி.சி.சி.ஐ இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. உள்ளூர் போட்டிகளில் இதுவரை 4 ஆட்டங்களிலும், மூன்று முதல்தர ஆட்டங்களிலும் அவர் இதுவரை விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -