எல்லாம் ஓகே . ஆனா இன்னும் ஏன் ஐ.பி.எல் போட்டி அட்டவணை வெளியாகவில்லை தெரியுமா ? – காரணம் இதுதானாம்

Hot-star
- Advertisement -

ஐபிஎல் தொடர் இந்த வருடம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. மொத்தமுள்ள 60 போட்டிகளும் இங்கு உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய மூன்று மைதானங்களில் தான் நடக்கிறது. இந்த மூன்று மைதானங்களும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானவை இதற்காக கடந்த ஒரு வாரமாக அனைத்து அணிகளும் தங்களது வீரர்களை வைத்து தங்களது சொந்த மைதானத்தில் பயிற்சியைச் செய்து வந்தனர்.

ipl

- Advertisement -

பயிற்சியை தொடர்ந்து கடந்த 21ம் தேதி முதல் ஐபிஎல் அணிகள் அனைத்தும் துபாய்க்கு பயணத்தை தொடங்கின. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு போன்ற அணிகளைச் சேர்ந்த இந்திய வீரர்கள் பயிற்சியை முடித்து துபாய் சென்றனர்.

தற்போது உள்ள விதிமுறைகளின்படி அனைத்து வீரர்கள் மற்றும் அதிகாரிகள் என அனைவரும் ஆறு நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருப்பார்கள். இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு அடுத்தடுத்த கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். அந்த பரிசோதனைகளின் முடிவில் கொரோனா நெகட்டிவ் என்ற முடிவை பெற்ற பின் கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு பிறகே விளையாட அனுமதிக்கப்படுவார்கள்.

IPL-bowlers-1

போட்டி தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாத காலம் இருக்கும் நிலையில் ஐபிஎல் அட்டவணை இன்னும் வெளியாகவில்லை. இதுகுறித்து “தி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்” வெளியிட்டுள்ள தகவலின்படி : போட்டி துவங்கும் முதல் நான்கு நாட்கள் வெளிநாட்டுக் வீரர்களின் வருகையை எதிர்பார்த்து மேலும் அதுகுறித்த விவரங்களை வைத்தே போட்டி நடத்தப்படும்.

ipln

அப்போதும் வெளிநாட்டு வீரர்கள் வரவில்லை என்றால் போட்டி தொடர்ந்து நடத்தப்படும் இதையெல்லாம் மனதில் வைத்துத் தான் அட்டவணை தயார் செய்யப்படும் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம் வீரர்களுக்கு எடுக்கப்படும் கொரோனா பரிசோதனை முடிவு பொருத்தும் அட்டவணை தயார் செய்யப்படும் இவையெல்லாம் தாமதத்திற்கான காரணம் என்று கூறப்படுகிறது.

Advertisement