“பிளான் பி” கையில் வைத்திருந்திருந்தும் பி.சி.சி.ஐ யால் அது முடியாமல் போயிடுச்சி – ஐ.பி.எல் தொடரின் நிறுத்தத்திற்கான காரணம்

BCCI

சிறப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர் நேற்று முன்தினம் இருந்து பெரும் சிக்கலை சந்தித்தது. முதலில் கொல்கத்தா அணி வீரர்களுக்கு கொரோனா பரவ துவங்க முதலில் கொல்கத்தா மற்றும் பெங்களூர் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து வீரர்களுக்கு இடையே கொரோனா பரவ தொடங்கியதை அடுத்து வீரர்களின் பாதுகாப்பு கருதி ஐபிஎல் தொடரை பிசிசிஐ ஒத்திவைத்து இருந்தது.

KKRvsRCB

இந்நிலையில் இவ்வாறு ஐபிஎல் தொடரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்ற முடிவை பிசிசிஐ முதலிலேயே எடுக்கவில்லை என்றும் பலகட்ட ஆலோசனைகளுக்கு பிறகுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது வீரர்களிடையே பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக போட்டி இந்த தொடர் தேதி அறிவிக்கப்படாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளதே தவிர ரத்து செய்யப்படவில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

கடந்த 4 நாட்களாக அடுத்தடுத்து வீரர்களுக்கிடையே தொற்று பரவி கொண்டிருந்த போது முதலில் இந்த தொடரை தள்ளி வைக்கும் எண்ணம் இல்லை என்றும் எப்படியாவது பயோ பபுளை வைத்து இந்த தொடரை வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட வேண்டுமென்று என்று என்பதையே தான் பிசிசிஐ நினைத்துக் கொண்டிருந்தது .மேலும் இந்த தொடரில் ஒரு சில வீரர்களுக்கு கொரனோ பரவியதைத் தொடர்ந்து பிசிசிஐ பிளான் பி-யை செயல்படுத்த நினைத்தது பிசிசிஐ.

mishra

இந்த பிளான் பி யாதெனில் போட்டிகளை ஒரே மைதானத்தில் நடத்த வேண்டும் என்பதுதான் அதன்படி ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி மும்பை மைதானத்தில் போட்டியை நடத்தலாம் என்ற முடிவுக்கு வந்தது. ஆனால் அப்போதுதான் மீண்டும் பிசிசிஐ கிறங்கடிக்கும் வகையில் டெல்லி அணியில் ஒருவருக்கும், ஐதராபாத் அணியில் ஒருவருக்கும் தொற்று ஏற்பட்டது. இதன் காரணமாக போட்டி அட்டவணையில் பல சிக்கல்கள் எழுந்தது. இந்த இடத்தில்தான் பிசிசிஐ தடுமாறிப்போய் அந்த பிளான் பி-யை டிராப் செய்தது.

- Advertisement -

Ground-Dharamsala

இல்லையெனில் ஒரே மைதானத்தில் போட்டியை வைத்து நடத்தி முடித்திருக்கும். இந்நிலையில் மற்ற அணி வீரர்களுக்கும் தொற்று பரவ அவசர அவசரமாக மீட்டிங்கை ஏற்பாடு செய்த பிசிசிஐ ஒவ்வொரு அணி வீரர்களுக்கும் தொற்று பரவத் தொடங்கி உள்ளதால் அங்குள்ள வெளிநாட்டு வீரர்களுக்கும் இது ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று முடிவு செய்து இறுதியில் தொடரை தள்ளி வைப்பது தற்போது அவசியம் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.