தானாக முன்சென்று வாய்ப்பை வழங்கியும் தட்டி கழித்த ஹார்டிக் பாண்டியா – கடுங்கோபத்தில் பி.சி.சி.ஐ

Pandya-2
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி ஆல்-ரவுண்டராக திகழ்ந்து வந்த ஹார்டிக் பாண்டியாவிற்கு கடந்த இரண்டு ஆண்டுகளாகவே நேரம் சரியில்லாமல் உள்ளது. ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாகவே முதுகுப் பகுதியில் செய்துகொண்ட அறுவை சிகிச்சை காரணமாக பந்து வீசாமல் இருந்து வரும் அவர் பேட்டிங்கிலும் பார்ம்மை இழந்து முன்பு போல அதிரடியாக விளையாட முடியாமல் தவித்து வருகிறார். நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரின் போது பந்து வீசுவார் என்று நம்பி தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் அந்த தொடரிலும் பெரிய அளவில் பந்து வீசவில்லை.

pandya

- Advertisement -

இதன் காரணமாக நியூசிலாந்து தொடரில் அவருக்கு இடம்கிடைக்காது என்று கூறப்பட்ட வேளையில் தாமாக முன்வந்து நியூசிலாந்து தொடரில் தன்னை தேர்வு செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். மேலும் தான் முழுஉடற்தகுதி பெற்ற பின்னர் தான் மீண்டும் அணிக்கு திரும்புவேன் என்று கூறிய பாண்டியா இந்த தென் ஆப்ரிக்க தொடரில் இருந்து ஓய்வு எடுத்துக் கொண்டார்.

அதோடு தான் மீண்டும் எப்போது பந்து வீசும் அளவிற்கு தயாராக இருக்கிறேனோ அப்போது தன்னை தெரிவு செய்தால் போதும் என்று அவர் பிசிசிஐ-யிடம் கேட்டுக்கொண்டார். அதன்படி தற்போது தென் ஆப்ரிக்க தொடரில் இடம் பிடிக்காத அவர் தனது காயத்திலிருந்து குணமடைந்தது நிச்சயம் அடுத்து இந்தியாவில் நடைபெற உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்பார் என்று கூறப்பட்டது.

pandya 1

அதன்படியே தற்போது விஜய் ஹசாரே கோப்பையில் பங்கேற்காத அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி எடுத்துவரும் அவர் தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் விளையாடமாட்டேன் என்று ஹார்டிக் பண்டியா கூறியதாக தகவல்கள் வெளியாகிஉள்ளது. ஆனால் பி.சி.சி.ஐ காயத்தில் இருந்து பாண்டியா குணமடைய போதிய அவகாசம் கொடுத்து மீண்டும் அணியில் சேர்க்க வாய்ப்பும் வழங்கிய நிலையில் பாண்டியா அதனை தட்டிக் கழித்துள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : மளிகை கடைக்காரரின் மகன் இன்று கிரிக்கெட் வீரர். யார் இந்த சித்தார்த் யாதவ்? – கடந்து வந்த பாதை

மேலும் மீண்டும் முழு உடற்தகுதி பெற்று பின்னரே விளையாடுவேன் என்று ஹார்டிக் பண்டியா திட்டவட்டமாக கூறிவிட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அவர் மீது கடும் கோபத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement