மளிகை கடைக்காரரின் மகன் இன்று கிரிக்கெட் வீரர். யார் இந்த சித்தார்த் யாதவ்? – கடந்து வந்த பாதை

Siddharth
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் வரும் ஜனவரி 14-ஆம் தேதி முதல் பிப்ரவரி 5-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் 14-வது ஐசிசி தொடருக்கான 19 வயதுக்குட்பட்டோர் இந்திய அணியானது கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிசிசிஐ சார்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த தொடருக்கான 17 வீரர்கள் கொண்ட இந்திய அணியில் உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளம் வீரர் சித்தார்த் யாதவின் பின்னணி ரசிகர்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அப்படி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்திய அணியில் இடம்பிடித்துள்ள சித்தார்த் யாதவ் யார்? அவரது பின்னணி என்ன? என்பதை இந்த தொகுப்பில் நாங்கள் உங்களுக்காக வழங்கி உள்ளோம்.

siddharth 1

- Advertisement -

அதன்படி உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு சிறிய கிராமத்தில் சாதாரண மளிகை கடை நடத்தும் ஸ்ரவன் யாதவின் மகன் தான் சித்தார்த் யாதவ். காஜியாபாத் அருகே உள்ள கோட்கான் எனும் சிறிய கிராமத்தில் மளிகை கடை நடத்தி வரும் இவர் தனது மகனுக்கு கிரிக்கெட் மீது உள்ள ஆர்வத்தையும் அவரது திறமையையும் கண்டு எட்டு வயதிலேயே அவரை ஒரு கிரிக்கெட் வீரராக உருவாக்க நினைத்தார். அதன்படி தனது கடையில் வியாபாரம் போனாலும் பரவாயில்லை என்று தினமும் மதியம் 3 மணி நேரம் அவருக்கு பயிற்சி கொடுத்து வந்துள்ளார்.

அப்படி தனது மகனை அழைத்துக் கொண்டு பயிற்சிக்கு செல்லும் போது அவரே தனது மகனுக்கு பந்து வீசுவாராம். அப்படி இல்லையெனில் தான் பேட்டிங் செய்து அவரது மகனை பந்துவீச செய்வாராம். இப்படி தினமும் மதியம் 2 மணிக்கு பயிற்சிக்கு சென்றால் 6 மணி வரை மகனுக்கு பயிற்சி அளித்த பின்னரே மீண்டும் வந்து கடையை திறப்பாராம். இப்படி தனது மகனுக்காக கடும் உழைப்பினை வழங்கிய இவர் என்று சித்தார்த் யாதவை இந்திய அணியில் இடம் பிடிக்கும் அளவிற்கு உயர்த்தி உள்ளார்.

Siddharth-Yadav-shop

தனது குடும்பத்தில் ஏகப்பட்ட அழுத்தம் இருந்தும் பின் வாங்காமல் தனது மகனை ஒரு கிரிக்கெட் வீரராக மாற்றியுள்ளார். இப்படி சிறிது சிறிதாக கிரிக்கெட் விளையாட்டினை புரிந்துகொண்டு மாவட்ட அளவில், பள்ளி அளவில் என நடைபெற்ற போட்டிகளில் சிறப்பாக விளையாடிய சித்தார்த் யாதவ் பல தடைகளை கடந்து தற்போது அடுத்த கட்டத்துக்கு சென்றுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் 16 வயதுக்குட்பட்ட அணியில் தேர்வான இவர் ஒரு இரட்டை சதம் மற்றும் 5 சதம் அடித்து அசத்தினார்.

- Advertisement -

இதையும் படிங்க : 2018-லயே ரிட்டயர்டு ஆகியிருப்பேன். ஆனா எங்க அப்பா சொன்ன வார்த்தை – மனம்திறந்த அஷ்வின்

தற்போது இந்திய அணிக்காக அண்டர் 19 உலக கோப்பை தொடரில் விளையாட தேர்வாகியுள்ளார். இந்த உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தற்போது இவர் பயிற்சி பெற்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement