2018-லயே ரிட்டயர்டு ஆகியிருப்பேன். ஆனா எங்க அப்பா சொன்ன வார்த்தை – மனம்திறந்த அஷ்வின்

ashwin
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்துவரும் ரவிச்சந்திரன் அஷ்வின் கடந்த 2010ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி 111 ஒருநாள் போட்டிகள், 51 டி20 போட்டிகள் மற்றும் 81 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அறிமுகமான காலத்திலிருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அஷ்வின் இந்திய அணியின் முதன்மை பந்து வீச்சாளராக திகழ்ந்து வந்தார். ஆனால் 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு அவருக்கு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்காமல் கழற்றி விடப்பட்டார். அதை தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி வந்த அஷ்வின் அயல்நாட்டு டெஸ்ட் போட்டிகளிலும் பெஞ்சில் அமர வைக்கப்பட்டு வந்தார்.

ashwin

- Advertisement -

இருப்பினும் தனது நம்பிக்கையை எந்த இடத்திலும் தவறவிடாத அஷ்வின் சிறப்பாக பந்து வீசி தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்து வருவது மட்டுமின்றி டி20 கிரிக்கெட்டிலும் கம்பேக் கொடுத்துள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற உலகக்கோப்பை டி20 தொடரில் விளையாடிய அஷ்வின் இனிவரும் தொடர்களிலும் அவர் இந்திய அணிக்காக தொடர்ச்சியாக விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் தான் கடந்து வந்த கடினமான பாதை குறித்தும், அவர் பட்ட கஷ்டங்கள் குறித்தும் தற்போது பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : 2018ஆம் ஆண்டு வாக்கில் எனக்கு ஏற்பட்ட காயம் மற்றும் சில வீரர்களின் வருகை என எனது இடம் பெரிய கேள்விக்குறியாகியது. அதுமட்டுமின்றி இங்கிலாந்து தொடர், ஆஸ்திரேலிய தொடர் என எனக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் மறுக்கப்பட்ட போது என்னுடைய கிரிக்கெட் பயணம் முடிந்ததோ என்ற கவலையில் இருந்தேன். மேலும் அப்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விடலாம் என்று கூட யோசித்தேன்.

ashwin

ஆனால் நான் இதுபோன்று எப்போது அழுத்தத்தில் இருந்தாலும் என்னுடைய மனைவியிடம் மனம் திறந்து பேசுவேன். அதேபோன்று அந்த கஷ்டமான நேரங்களில் எனது தந்தையும் எனக்கு உறுதுணையாக இருப்பார். அப்போது அவர் என்னிடம் ஒரு முறை பேசுகையில் : நான் உயிரோடு இருக்கும்போதே ஒயிட் பால் கிரிக்கெட்டில் உன்னுடைய கம்பேக்கை நிச்சயம் பார்ப்பேன் என்று என்னிடம் கூறியிருந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : எங்களது குழந்தையின் முகத்தை வெளியுலகத்திற்கு காட்டாததற்கு இதுவே காரணம் – அனுஷ்கா சர்மா பதிவு

அவர் கூறியபடியே தற்போது நான் டி20 கிரிக்கெட்டில் இடம் பிடித்து விளையாடி வருகிறேன். விரைவில் ஒருநாள் அணியிலும் இடம் பிடித்து விளையாடுவேன் என்றும் கூறினார். என்னுடைய தந்தை அன்று கூறிய வார்த்தையை இன்றளவும் என்னால் மறக்க முடியாது என நெகிழ்ச்சியான கருத்தினை அஷ்வின் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement