- Advertisement -
இந்திய கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று வெளியேறிய ரோஹித் சர்மாவை வாழ்த்திய பி.சி.சி.ஐ – விவரம் இதோ

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நேற்று மே 7ஆம் தேதி மாலை திடீரென சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். அவரது இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்திய அணிக்காக கடந்த 2013-ம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வந்த ரோகித் சர்மா 67 போட்டிகளில் விளையாடி 12 சதம் மற்றும் 18 அரைசதங்கள் என 4301 ரன்களை குவித்துள்ளார்.

ரோஹித் சரமாவை வாழ்த்திய பி.சி.சி.ஐ :

கடைசியாக நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் என அடுத்தடுத்த டெஸ்ட் தோல்விகளை சந்தித்ததால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை தவறவிட்டது.

- Advertisement -

இதன் காரணமாகவே அவரின் டெஸ்ட் கேப்டன்சி மீது அதிருப்தியில் இருந்த பிசிசிஐ டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் பதிவிலிருந்து அவரை நீக்க முடிவு செய்து இருந்தது. அதே போன்று தற்போது 38 வயதாகும் ரோகித் சர்மா எதிர்வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டன் பதிவியிலிருந்தும் நீக்கப்படுவார் என்றெல்லாம் பேசப்பட்டு வந்தது. இதன் காரணமாக அதனை எல்லாம் கருத்தில் கொண்ட ரோகித் சர்மா முன்கூட்டியே தானாக ஓய்வு பெறுவதாக அறிவித்து விட்டார்.

இதனால் இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது. இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று வெளியேறிய இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவை தற்போது பிசிசிஐ வாழ்த்தியுள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள ஒரு பதிவில் குறிப்பிடப்பட்டதாவது : நன்றி கேப்டன் டெஸ்ட் கிரிக்கெட்டில் உங்களது சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.

- Advertisement -

இருந்தாலும் ஒருநாள் போட்டிகளில் அவரே இந்திய அணியை தொடர்ந்து வழி நடத்துவார். உங்களை நினைத்து பெருமை அடைகிறோம் என்று பி.சி.சி.ஐ தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. இந்த பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ள வேளையில் ஒரு பக்கம் டெஸ்ட் போட்டியில் இருந்து ரோஹித் ஓய்வு பெற அழுத்தம் கொடுத்ததே பிசிசிஐ தான் என்பதால் பிசிசிஐ-யின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க : ஐ.பி.எல் 2025 தொடரில் இருந்து வெளியேறிய தேவ்தத் படிக்கல்.. என்ன காரணம்? – மாற்று வீரராக இணைந்த கேப்டன்

ஏற்கனவே டி20 உலக கோப்பை தொடரை வென்ற கையோடு டி20 போட்டிகளில் இருந்து வெளியேறிய ரோகித் சர்மா தற்போது டெஸ்ட் போட்டியிலிருந்தும் ஓய்வை அறிவித்துள்ளதால் எதிர்வரும் 2027 உலக கோப்பையுடன் அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -