
இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரபல உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே தொடரானது இன்று முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அணிகளும் விளையாடுவதால் இந்த தொடரானது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் அனைவரும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.
ஏனெனில் இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ சர்வதேச போட்டிகள் இல்லாத போது இந்திய வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. அதன் காரணமாக சமீப காலமாகவே நட்சத்திர வீரர்களும் உள்ளூர் தொடர்களில் விளையாடி வருகின்றனர்.
அந்த வகையில் நியூசிலாந்து தொடருக்கு முன்னதாக இருக்கும் ஓய்வில் இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் நட்சத்திர வீரர்கள் அனைவரும் இந்த விஜய் ஹசாரே தொடரில் தங்களது மாநில அணிக்காக விளையாடி வருகின்றனர். அந்த வகையில் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா மும்பை அணிக்காகவும், விராட் கோலி டெல்லி அணிக்காகவும் விளையாட இருக்கின்றனர்.
அதேபோன்று இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் பல்வேறு நட்சத்திர வீரர்களும் தங்களது சொந்த மாநில அணிக்காக விளையாட இருக்கின்றனர். இந்நிலையில் குஜராத் மாநிலத்தை சொந்தமாக கொண்ட ஜஸ்ப்ரீத் பும்ரா மட்டும் இந்த விஜய் ஹசாரே தொடரில் விளையாட வேண்டாம் என்றும் அவருக்கு ஓய்வு வழங்குவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
அதற்கு காரணம் யாதெனில் : எதிர்வரும் நியூசிலாந்து தொடர் அதன் பின்னர் வரும் டி20 உலக கோப்பை தொடர் என இரண்டு தொடர்களுமே இந்திய அணிக்கு மிக முக்கியமான தொடர் என்பதினால் ஜஸ்ப்ரீத் பும்ராவிற்கு இந்த ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : டி20 வேர்ல்டுகப் டீம்ல இருந்து தூக்குனாலும் மறுபடியும் சுப்மன் கில்லுக்கு அந்த பதவி கிடைக்கும் – வெளியான தகவல்
ஒருவேளை அவர் இந்த உள்ளூர் தொடரில் விளையாடி காயம் ஏற்பட்டால் அது இந்திய அணிக்கு உலகக்கோப்பை தொடரின் போது மிகப்பெரிய பின்னடைவு ஏற்படுத்தும் என்பதற்காகவே அவரது பணிச்சுமை மற்றும் காயம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு பி.சி.சி.ஐ இந்த சிறப்பு சலுகையை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.