இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியானது இன்று அக்டோபர் 25-ஆம் தேதி சிட்னி நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியானது முதல் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ரன்களை குவித்தது.
நிதீஷ் ரெட்டி ஏன் விளையாடவில்லை : பி.சி.சி.ஐ விளக்கம்
இந்த மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள் நடைபெற்றிருந்தது. அந்தவகையில் இரண்டு மாற்றங்களாக வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மற்றும் நிதீஷ் ரெட்டி ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக குல்தீப் யாதவ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இந்த ஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் ஆல்ரவுண்டர் நிதீஷ் ரெட்டி ஏன் இடம்பெறவில்லை? என்பது குறித்த தெளிவான விளக்கத்தை இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ளது.
அந்தவகையில் பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டதாவது : கடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது விளையாடியிருந்த நிதீஷ் ரெட்டி அந்த போட்டியின் போது இடது தொடைப்பகுதியில் காயமடைந்தார். அதன் காரணமாகவே அவரை நாங்கள் மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான தேர்வில் கருத்தில் கொள்ளவில்லை.
தற்போது காயமடைந்துள்ள நிதீஷ் ரெட்டியை பி.சி.சி.ஐ மருத்துவக்குழு கண்காணித்து வருகிறது. அவரது காயம் குறித்த முழு அறிக்கை முறைப்படி வெளியாகும் என்றும் பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது. இதன்மூலம் நிதீஷ் ரெட்டி டி20 தொடரில் விளையாடுவாரா? மாட்டாரா? என்பது விரைவில் தெரியவரும்.
இதையும் படிங்க : பிரேசிலை விட பெருசு.. ரசிகர்களால் இந்தியா தான் கிரிக்கெட்டின் கிங்.. எல்லாத்தையும் நடத்துறாங்க.. பிரெட் லீ
இந்திய அணியில் ஹார்டிக் பாண்டியாவுக்கு அடுத்து வளர்ந்து வரும் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக பார்க்கப்படும் நிதீஷ் ரெட்டி நம்பிக்கையான செயல்பாட்டை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்த வேளையில் திடீரென அவர் காயமடைந்துள்ளது இந்திய அணிக்கும் சரி, அவருக்கும் சரி சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.



