இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேச கிரிக்கெட் அணியானது இந்திய அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்க இருக்கிறது.
பும்ராவை ஒதுக்கிய பி.சி.சி.ஐ :
இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனையும் துவங்கியுள்ளது. இந்நிலையில் இந்த வங்கதேச அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய அணி பி.சி.சி.ஐ-யின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் 16 வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணியில் நட்சத்திர வீரர்கள் பலரும் இடம் பெற்றுள்ளதால் இந்த தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டன் யார் என்பதை பிசிசிஐ அறிவிக்கவில்லை.
இதன் காரணமாக மறைமுகமாக பும்ராவை தற்போது பிசிசிஐ கீழ் இறக்கியுள்ள சம்பவம் தெரிய வந்துள்ளது. ஏனெனில் ஏற்கனவே இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான துணை கேப்டனாக அனுபவமில்லாத இளம் வீரரான சுப்மன் கில்லை அறிவித்து இருந்தனர்.
எதிர்கால கேப்டனாக பார்க்கப்படும் அவர் கேப்டன்சி அனுபவத்தை பெறுவதற்காகவே அந்த துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக இருந்த அனுபவ வீரர் பும்ரா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சுப்மன் கில்லை கொண்டு வருவதற்காக தான் பி.சி.சி.ஐ இந்த செயலை செய்துள்ளதாக தெரிகிறது.
இதையும் படிங்க : ஸ்டம்ப் மைக் சுவாரஸ்யம்.. அம்மா மேல சத்தியம் பண்ணுங்க.. குல்தீப்பை ஸ்லெட்ஜ் செய்த ரிஷப் பண்ட்
அதற்காகவே வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் துணை கேப்டன் யார்? என்பதை அறிவிக்கவில்லை என்றும் தெரிகிறது. ஒரு வேளை இந்திய அணியின் நிர்வாகம் டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில்லை அறிவித்தால் நிச்சயம் அதனால் பும்ரா அதிருப்தி அடைவார் என்பது உறுதி.



