ஸ்டம்ப் மைக் சுவாரஸ்யம்.. அம்மா மேல சத்தியம் பண்ணுங்க.. குல்தீப்பை ஸ்லெட்ஜ் செய்த ரிஷப் பண்ட்

- Advertisement -

துலீப் கோப்பை 2024 கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் முடிந்துள்ளது. அதில் பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான இந்தியா ஏ அணியை அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான சி அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அந்த அணியின் வெற்றிக்கு ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக முக்கிய பங்காற்றினார்.

காயத்திலிருந்து குணமடைந்த பின் ஐபிஎல் தொடரில் விளையாடி கம்பேக் கொடுத்த அவர் 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடி இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார். அதே போல டெஸ்ட் கிரிக்கெட்டில் கம்பேக் கொடுப்பதற்காக அவர் இத்தொடரில் விளையாடினார். அந்த வாய்ப்பில் இந்தியா பி அணிக்காக விளையாடிய அவர் அழுத்தமான இரண்டாவது 9 அதிரடியாக 9 பவுண்டரி 2 சிக்சருடன் 61 (47) ரன்கள் குவித்து வெற்றியில் பங்காற்றினார்.

- Advertisement -

ஸ்டம்ப் மைக் சுவாரஸ்யம்:

அதே போல 2வது இன்னிங்ஸில் 141-7 என இந்தியா ஏ அணி தடுமாறிக் கொண்டிருந்த போது குல்தீப் யாதவ் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது 41வது ஓவரின் 5வது பந்தில் குல்தீப் பவுண்டரி அடித்தார். அதனால் அடுத்த பந்தில் அவர் சிங்கிள் எடுப்பதை நிறுத்துவதற்காக ரிஷப் பண்ட் ஃபீல்டர்களை அருகே கொண்டு வந்து நிறுத்தி விட்டு சொன்னது பின்வருமாறு.

“அனைவரும் இவர் சிங்கிள் எடுப்பதை நிறுத்துவதற்காக அருகே வந்து நில்லுங்கள்” என்று சொன்னார். அதற்கு குல்தீப் யாதவ் “நான் சிங்கிள் எடுக்க மாட்டேன்” என்று பதிலளித்தார். அதற்கு ரிஷப் பண்ட் “அப்படியென்றால் அம்மா மீது சத்தியம் செய்யுங்கள்” என்று சொன்னார். அதே போல மற்றொரு தருணத்தில் குல்தீப் யாதவிடம் “இவரை சிங்கிள் எடுக்க விடுங்கள். இவரை அவுட்டாக என்னிடம் திட்டம் இருக்கிறது” என்று ரிஷப் பண்ட் சத்தமாக சொன்னார்.

- Advertisement -

ஜாலியான ஸ்லெட்ஜிங்:

அதற்கு “திட்டம் போடுங்கள். ஆனால் இப்போது கொஞ்சம் அமைதியாக இருங்கள்” என்று குல்தீப் யாதவ் பதிலளித்தார். அதற்கு “அப்படியானால் சீக்கிரம் அவுட்டாகி செல்லுங்கள்” என்று ரிஷப் பண்ட் சொன்னார். அவர்கள் இப்படி ஜாலியாக பேசி ஸ்லெட்ஜிங் செய்து கொண்டது ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. குறிப்பாக ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக அந்த இருப்பதுமே ஒன்றாக விளையாடுகின்றனர்.

இதையும் படிங்க: வங்கதேச அணிக்கெதிரான தொடரில் இடம்பிடித்தாலும் அந்த 5 வீரர்கள் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க வாய்ப்பில்லை – விவரம் இதோ

இந்தியாவுக்காகவும் ஒன்றாக விளையாடுவதால் ரிஷப் பண்ட் – குல்தீப் யாதவ் ஆகியோர் இப்படி ஜாலியாக பேசிக்கொண்டனர் என்றே சொல்லலாம். கடந்த காலங்களில் ஆஸ்திரேலிய வீரர் டிம் பெய்ன் போன்ற பல எதிரணி பேட்ஸ்மேன்களை ரிஷப் பண்ட் இப்படி ஜாலியாக ஸ்லெட்ஜிங் செய்துள்ளார். தற்போது காயத்திலிருந்து குணமடைந்த பின் பேட்ஸ்மேனாக மட்டுமின்றி ஸ்லெட்ஜிங் செய்யும் கீப்பராகவும் அவர் கம்பேக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement