விராட் கோலிக்கு எந்த பிரச்னையும் இல்லை.. ரோஹித் சர்மாவிற்கு தான் ஆப்பு – பி.சி.சி.ஐ வெளியிட்ட தகவல்

BCCI
- Advertisement -

கடந்த சில தொடர்களாகவே இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர வீரரான விராட் கோலி ஆகியோர் மோசமான பேட்டிங் பார்மை வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ அவர்கள் இருவரது எதிர்காலம் குறித்தும் முக்கிய முடிவு ஒன்றினை எடுத்துள்ளதாகவும் அது குறித்த ஆலோசனை நடைபெற்று அவர்கள் இருவரது எதிர்காலம் குறித்த சில தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

ரோஹித் சர்மாவிற்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை :

தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கும் இந்திய அணி அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட இருக்கிறது. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி வெற்றி பெறவில்லை எனில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவருமே கடும் அழுத்தத்தை சந்திப்பார்கள் என்று தெரிகிறது.

- Advertisement -

அதிலும் குறிப்பாக ரோகித் சர்மா மிகவும் மோசமாக பாதிக்கப்படுவார் என்றும் தெரிகிறது. ஏனெனில் தற்போது தனது கரியரின் கடைசி கட்டத்தில் இருக்கும் ரோகித் சர்மா எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை எனில் அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

இது குறித்து பெயர் வெளியிடப்படாத பிசிசிஐ அதிகாரி ஒருவர் பேசும் பொழுது கூறியதாவது : கடந்த முறை நாங்கள் மீட்டிங்கில் பேசியபோது ரோகித் சர்மாவின் எதிர்காலம் குறித்து நிறைய ஆலோசித்து விட்டோம். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின்னர் அவரது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் பேசி இருந்தோம்.

- Advertisement -

இந்திய அணியின் நிர்வாகம் அடுத்ததாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் உலக கோப்பை தொடருக்காக சில திட்டங்களை வகுக்க இருப்பதால் அதில் சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்படும். விராட் கோலிக்கு தற்போது எந்த விதமான நெருக்கடியும் இல்லை. ஏனெனில் ஆஸ்திரேலிய தொடரில் அவர் ஒரு சதம் அடித்திருந்தார்.

இதையும் படிங்க : ரோஹித் சர்மாவுக்கு கேப்டனாக அதுதான் கடைசி தொடர்.. வெற்றியோடு போங்க.. வாழ்த்து கூறிய – சுரேஷ் ரெய்னா

அதேபோன்று ஒருநாள் போட்டிகளை பொருத்தவரை அவருக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. ஆனால் ரோகித் சர்மா தற்போது மோசமான ஃபார்மில் இருப்பதால் அவர் வெளியேற்றப்பட அதிக வாய்ப்புள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement