இந்தியாவில் தற்போது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் அடுத்த மாத ஆரம்பத்தில் இந்திய அணியானது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இதற்கு முன்னதாக இந்திய ஏ அணி இங்கிலாந்துக்கு சென்று இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியிலும் விளையாட இருக்கிறது.
டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்யப்படவுள்ள வேகப்பந்து வீச்சாளர் :
இந்நிலையில் இந்த இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் முன்னணி வீரரான விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெற்றதால் எதிர்வரும் இந்த இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதோடு இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டன் யார்? என்ற கேள்வியும் அதிகரித்துள்ளது.
இந்த இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி நாளை மே 24ம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிற வேளையில் அதில் பல புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங்கிற்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்முறையாக அறிமுக வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதுவரை டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இந்திய அணிக்காக விளையாடியுள்ள வேளையில் அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் அர்ஷ்தீப் சிங் கடந்த சில ஆண்டுகளாகவே மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் வேளையில் அவரை டெஸ்ட் போட்டிகளுக்கும் பயன்படுத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இதன் காரணமாக தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு அவரை தனிப்பட்ட வகையில் பயிற்சி அளிக்க இருக்கும் பிசிசிஐ இங்கிலாந்து தொடருக்கும் அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : ரோஹித், கோலி போனா என்ன? பும்ரா இல்லாம ஜெய்ச்ச மாதிரி இங்கிலாந்தில் ஜெய்ப்போம்.. கம்பீர் உறுதி
ஏற்கனவே கடந்த 2022 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகிய அர்ஷ்தீப் சிங் இதுவரை 63 டி20 போட்டிகளிலும் 9 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் எப்போதுமே இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முன்னுரிமை இருக்கும் வேளையில் நிச்சயம் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.



