ஐ.பி.எல் ஸ்பான்சராக விவோ தொடருமா ? பி.சி.சி.ஐ முடிவு இதுதானாம் – விவரம் இதோ

ipl
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் டி20 லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 12 ஆண்டுகள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில் தற்போது பதிமூன்றாவது சீசனாக ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் துவங்க இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட பாதிப்பு காரணமாக பலமுறை ஒத்திவைக்கப்ட்டு தற்போது விரைவில் நடைபெற இருப்பது உறுதியாகி உள்ளது.

IPL-1

- Advertisement -

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து விவோ ஸ்பான்சர் நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். லடாக் பள்ளத்தாக்கில் சீன தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் உயிர் உயிர் இழந்ததால் இந்தியா முழுவதும் சீனாவை எதிர்த்து பெரிய எதிர்ப்பலை எழுந்தது.

அதுமட்டுமின்றி இந்திய அரசாங்கம் சீனா மிதமான கோபத்தை வெளிப்படுத்த சீன பொருட்களை புறக்கணிக்குமாறு குரல் எழுப்பி உள்ளது. மேலும் சீனாவை மையமாகக் கொண்டு செயல்படும் 59 ஆப்புகளை இந்தியாவில் தடை செய்யவும் இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Ipl cup

இந்நிலையில் தற்போது விவோ ஐபிஎல் என்று அழைக்கப்படும் இந்த ஐபிஎல் ஸ்பான்சர் ஆன விவோ சீன நிறுவனம் என்பதால் இந்த ஸ்பான்சரை ரத்து செய்யுமாறு பலரும் வேண்டுகோள் வைத்துள்ளனர். ஆனால் சீன நிறுவனம் தரும் இந்த ஸ்பான்சர் பணத்தை இழக்க முடியாது என்று பிசிசிஐ பொருளாளர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

- Advertisement -

அதனால் இந்தாண்டு அந்த நடைமுறை அப்படியே தொடரும் என்று கூறப்படுகிறது. சீன நிறுவங்களின் ஒத்துழைப்பு வேறு, ஸ்பான்சர்ஷிப் இந்த தொகை நாம் வங்கம் பொருள்களுக்கான வரியாக வரும் தொகையே நாம் அவர்களிடம் இருந்து பெறுகிறோம். அதனால் இந்த வருடம் மாற்றம் இருக்காது என்று கூறப்பட்டது.

CskvsMi

இருப்பினும் இந்த ஸ்பான்சர்ஷிப் குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் அதுவரை இந்த நடைமுறை தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அதுவரை இந்த ஸ்பான்சர்கள் எங்களுடன் தான் இருப்பார்கள் அதுமட்டும் தான் கூறமுடியும் என்று தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement