- Advertisement -
ஆசிய கோப்பை

பாகிஸ்தான் அணியுடன் இந்தியா ஆசிய கோப்பை தொடரில் விளையாடுமா? – பி.சி.சி.ஐ சார்பில் வெளியான தகவல்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான சுமூக உறவின்மை காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே இனி இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளில் நடைபெறாது என பிசிசிஐ ஏற்கனவே அறிவித்து விட்டது. கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் பலியாகி இருந்தனர். இதன் காரணமாக பாகிஸ்தானுடன் அனைத்து வகையான உறவை இந்தியா முறித்துக் கொண்டது.

பாகிஸ்தான் அணிக்கெதிராக இந்தியா விளையாடுமா? :

மேலும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக இருதரப்பு தொடரில் விளையாடாது என்றும் அறிவித்துவிட்டது. அதோடு பாகிஸ்தான் அணியுடன் எப்போதாவது போட்டிகள் நடைபெற்றால் அதையும் புறக்கணிக்க வேண்டும் என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் பிரபலங்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

ஆனால் தற்போது ஆசிய கோப்பை தொடருக்கான போட்டிகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளன. இதன் காரணமாக இந்தியா பாகிஸ்தான் போட்டியானது நடைபெறுமா? இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுமா? என்பது போன்ற சில கேள்விகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் அதற்கு தெளிவான விளக்கம் ஒன்றினை கொடுக்கும் வகையில் பிசிசிஐ-யின் செயலாளர் தேவஜித் சைக்கியா சில முக்கிய கருத்துகளை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : பி.சி.சி.ஐ எப்பொழுதுமே மத்திய அரசின் வரைமுறைகளுக்கு உட்பட்டு தான் செயல்படும். மத்திய அரசு வகுக்கும் கொள்கைகள் அனைத்தையும் நாங்கள் பின்பற்ற கடமைப்பட்டுள்ளோம்.

- Advertisement -

இந்திய நாட்டின் நிர்வாகம் என்ன சொல்கிறதோ அதை கேட்டு நடப்பது எங்களுடைய பணி. தற்போது வரை இந்தியா பாகிஸ்தான் இடையே எந்த ஒரு இருதரப்பு தொடரிலும் விளையாடக்கூடாது என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது. அதனால் நாங்கள் இந்தியாவிலோ அல்லது பாகிஸ்தானிலோ இரு தரப்பு தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட முடியாது.

இதையும் படிங்க : ஆசிய கோப்பை அணியில் இடமில்லை என்றால் என்ன? ஷ்ரேயாஸ் ஐயரை தேடிவரும் கேப்டன் பதவி – விவரம் இதோ

அதே வேளையில் பன்னாட்டு தொடர் நடைபெறும் போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் சூழல் ஏற்பட்டால் அதுவும் அந்த போட்டிகள் வெளிநாட்டில் நடைபெற்றால் அதில் பங்கேற்கக் கூடாது என்று கூறப்படவில்லை. எனவே ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும் என அவர் தெளிவுபடுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -