இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடுமா ? – பி.சி.சி.ஐ விளக்கம்

Ganguly
- Advertisement -

இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உலக கோப்பை கிரிக்கெட் டி20 தொடர் இந்தியாவில் இந்த சிறப்பாக நடக்க இருக்கிறது. மொத்தமாக 16 அணிகள் கலந்து கொண்டு விளையாட இருக்கின்றன. நாற்பத்தி ஐந்து போட்டிகள் கொண்ட மொத்த டி20 தொடர் இந்தியாவில் ஒன்பது இடங்களில் வைத்து நடக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்கப்படுமா ? அவர்கள் இந்தியாவுக்கு வந்து விளையாட பிசிசிஐ அனுமதிக்குமா ? என்ற கேள்விகள் காரசாரமாக சமூக வலைதளங்களில் எழுந்தன.

Pak

அதற்கு பதில் கூறும் விதமாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தற்போது விளக்கம் அளித்துள்ளார். ஐசிசி இடம் பிசிசிஐ தரப்பில் சில முடிவுகளை வெளியிட்ட பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு முழுமையாக விசா வழங்கப்படும். பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் வீரர்கள் அனைவருக்கும் முழுமையான விசா வழங்கப்படும் என்றும், அவர்கள் இந்தியா வந்து இந்த தொடரில் பங்கேற்று விளையாடலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் பாகிஸ்தான் ரசிகர்கள் வந்து இந்தியாவில் போட்டியை காண்பது குறித்த முடிவு மிக விரைவில் கூறப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், 45 போட்டிகளை மொத்தமாக ஒன்பது மைதானங்களில் வைத்து முடிக்க திட்டமிட்டு உள்ளதாக கூறியுள்ளார். சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூர் தர்மசாலா, லக்னோ மற்றும் ஹைதராபாத் ஆகிய மைதானங்களில் போட்டிகள் நடைபெறும் என்று கூறினார்.

Pakistan

மேலும் இறுதிப் போட்டியை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடக்க முடிவெடுத்துள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கூறியுள்ளார்.

- Advertisement -

Pak-fans-1

உலக கோப்பை டி20 தொடரில் பங்கேற்க இருக்கும் 16 அணிகள் :

இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான், ஸ்ரீலங்கா, பங்களாதேஷ், நெதர்லாந்து, பப்புவா நியூ கினி, அயர்லாந்து, நமீபியா, ஸ்காட்லாந்து மற்றும் ஓமன்

Advertisement