நின்றுபோன ஐ.பி.எல் தொடர் நிச்சயம் நடைபெறும். எங்கு ? எப்போது நடைபெறும் – பி.சி.சி.ஐ அதிகாரபூர்வ தகவல்

IPL-1
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்ற 14ஆவது ஐபிஎல் தொடரின் முதற்கட்ட போட்டிகள் சிறப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் 2-வது கட்ட போட்டியின்போது வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக இந்த தொடரானது பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில் மீதமுள்ள 31 போட்டிகள் எங்கு எப்போது நடக்கும் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில் இந்த ஐபிஎல் தொடரை நடத்த பல்வேறு நாடுகளும் மீதமுள்ள தொடரை நடத்த முன் வந்தன.

IPL

- Advertisement -

ஆனால் இதுகுறித்து பிசிசிஐ தீவிரமாக ஆலோசனை நடத்தியது மட்டுமின்றி மே 29ஆம் தேதி இன்று நடைபெற்ற பிசிசிஐ நிர்வாகிகளின் கூட்டத்தில் இந்தத் தொடர் எங்கு எப்போது நடைபெறும் என்பதற்கான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்படி இந்த தொடர் திட்டமிட்டபடி நடைபெறவில்லை எனில் 2,400 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் பிசிசிஐ தலைவர் கங்குலி ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது மீதமுள்ள போட்டிகளை நடத்துவதற்கான ஆலோசனையை இன்று வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். அதன்படி இங்கிலாந்தில் “தி ஹண்ட்ரெட்” தொடர் நடைபெற உள்ளதால் அங்கு ஐபிஎல் போட்டியை நடத்த வாய்ப்பு இல்லாமல் போனது. அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் பயோ பபுள் மூலம் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்ட காரணத்தினால் இந்த ஆண்டும் மீதமுள்ள 31 போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் பயோ பபுள் கட்டுப்பாட்டில் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Ganguly

இதனை பி.சி.சி.ஐ நிர்வாகிகளும், அணியின் உரிமையாளரும் ஏற்றுக்கொண்டதால் திட்டமிட்டபடி இந்த தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்ற உறுதியான தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மீதமுள்ள 31 போட்டிகள் செப்டம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து அக்டோபர் 10ஆம் தேதிக்குள் நடைபெற்று முடியும் என்று அதிகாரபூர்வமான தகவல் வெளியாகி உள்ளது.

Dubai

இருப்பினும் இந்த தொடர் குறித்து உறுதியான அட்டவணை இன்னும் வெளியாகவில்லை என்றாலும் இன்னும் சில தினங்களில் அட்டவணை முறைபடுத்தப்பட்டு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நின்று போன ஐபிஎல் தொடர் மீண்டும் துவங்க உள்ள நிலையில் ரசிகர்களுக்கு இது நற்செய்தியாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement