
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருடன் தனது பதவியில் இருந்து வெளியேறியதால் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து இந்திய அணியானது கௌதம் கம்பீரின் பயிற்சியின் கீழ் தற்போது அடுத்தடுத்த தொடர்களில் விளையாடி வருகிறது. இதன் காரணமாக அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி எவ்வாறு செயல்படப்போகிறது என்பது குறித்து எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
அந்த வகையில் கம்பீரின் தலைமையின் கீழ் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணி சிறப்பாக செயல்பட்டு வந்தாலும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக பெற்ற டெஸ்ட் தோல்வி அனைவரது மத்தியிலும் பெரிய அளவில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரானது நெருங்கி வரும் வேளையில் இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பு இந்திய அணிக்கு தற்போது சிக்கலாகியுள்ளது.
இதன் காரணமாக அடுத்து வரும் ஆஸ்திரேலியா தொடர் இந்திய அணிக்கு முக்கிய தொடராக பார்க்கப்படுகிறது. இந்த ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணி 4 போட்டிகளில் பெற்றால் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும். ஒருவேளை இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு செல்லவில்லை என்றால் ரோகித் சர்மா ஓய்வு பெற்றுவிடுவார் என்ற கருத்தும் நிலவி வருகிறது.
இந்நிலையில் அப்படி ரோகித் சர்மா ஓய்வு பெற்று விட்டால் அடுத்த கேப்டன் யார்? என்பது குறித்த கேள்விகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ பயிற்சியாளரான கம்பீர் மற்றும் தேர்வுக்குழு தலைவரான அஜித் அகார்கர் ஆகியோரை அழைத்து தங்களது நிர்வாகிகளுடன் ஒரு பிரத்யேக மீட்டிங்கை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த மீட்டிங்கில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து தருமாறி வருவதால் ரோஹித் சர்மாவிற்கு பிறகு யாரை கேப்டனாக நியமிக்க போகிறீர்கள்? என்பது போன்ற கேள்விகளை அடுத்தடுத்து கம்பீரிடம் முன் வைத்துள்ளனர். ஆனால் அதற்கு கம்பீர என்ன பதில் அளித்தார்? என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.
இதையும் படிங்க : இதுமட்டும் போதும் அடுத்த டி20 உலகக்கோப்பைக்கான இடம் கன்பார்ம் – அசத்திய தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி
டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தொடர்ந்து சரிவை சந்திக்கும் பட்சத்தில் அது கம்பீருக்கு நெருக்கடியாக கூட மாறலாம். இவ்வேளையில் ரோகித் சர்மாவிற்கு அடுத்து இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில், பும்ரா, ரிஷப் பண்ட் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது. ஆனாலும் கம்பீர் இதனை எவ்வாறு கையாண்டு இந்திய அணியை மீட்டெடுக்க போகிறார் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.