கொரோனா பாதிப்பு பி.சி.சி.ஐ யும் விட்டு வைக்கவில்லையா ? மும்பை ஆபிஸுக்கு ஏற்பட்ட நிலைமை – விவரம் இதோ

BCCI
- Advertisement -

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதனால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 150தை தாண்டிவிட்டது. இதனால் அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

corona

- Advertisement -

மேலும் இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையே நடக்கவிருந்த ஒருநாள் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரும் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் பள்ளி மற்றும் தியேட்டர், ஷாப்பிங் மால் மற்றும் கல்வி நிறுவனங்களை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பல தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய அறிவுறுத்தி உள்ளன. தற்போது இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ யும் தனது அலுவலகத்தை மூடியுள்ளது.மும்பையில் உள்ள தனது அலுவலகத்தை மூடிவிட்டு தனது ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய உத்தரவிட்டுள்ளது.

BCCI

அதுமட்டுமின்றி இந்தியாவில் நடைபெற இருந்த அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் தற்போது காலவரையறையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் எந்தவித விளையாட்டு போட்டிகளும் விளையாட தடை விதிக்கப்ட்டுள்ளது.

- Advertisement -

ஏற்கனவே பெங்கால் கிரிக்கெட் வாரியமும் இதே காரணத்தினால் தங்களது கிரிக்கெட் வாரியத்தை மூடியது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ஐ.பி.எல் போட்டிகளும் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

crick-BCCI

அவசியம் ஏற்பட்டால் இந்த தொடரை இந்த தொடர் முழுவதையும் ரத்து செய்யவும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த தொடரை நடத்தினாலும் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதில் பெருமளவு சிக்கல் ஏற்பட்டுளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement