அடுத்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் 8 டீம் மட்டும்தான். 2022 லதான் 10 டீம் – பி.சி.சி.ஐ கொடுத்த தெளிவான விளக்கம்

Ganguly
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொதுக்குழுக் கூட்டம் இன்று அகமதாபாத் நகரில் நடைபெற்ற நிலையில் இந்த கூட்டத்தின் போது பல முக்கிய விடயங்கள் விவாதிக்கப்பட்டன. இதை இந்திய கிரிக்கெட் விவகாரங்கள் மற்றும் ஐபிஎல் விவகாரங்கள் என அனைத்தையுமே இந்த கூட்டத்தில் விவாதித்து இந்த கூட்டம் வெற்றிகரமாக முடிவடைந்து உள்ளது. அதில் முக்கிய பலஅம்ச கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு வந்து விவாதிக்கப்பட்டு அதற்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

Ganguly

- Advertisement -

மேலும் ஐபிஎல் போட்டிகளில் புதிய இரண்டு அணிகளை சேர்க்க பிசிசிஐ ஒப்புதல் அளித்தது குறித்தும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் புதிய அணிகளாக இரண்டு அணிகளை சேர்ப்பதற்கான கோரிக்கையை நடைமுறைப்படுத்த பிசிசிஐ ஆர்வம் காட்டியது. இருப்பினும் புதிய வீரர்களை போட்டிக்கு தயார் படுத்துவது, புதிய டெண்டர் மூலம் வீரர்களை ஏலம் எடுப்பது. அணியை வடிவமைப்பது என பல விடயங்கள் இருக்கின்றன.

இப்படி பல வேலைகள் இருப்பதால் அதற்கான போதிய கால அவகாசம் தற்போது இல்லாததால் அடுத்த ஆண்டு 8 அணிகள் மட்டுமே விளையாடும் என்றும் அதற்கடுத்த 2022ஆம் ஆண்டில் 10 அணிகள் கொண்டு ஐபிஎல் தொடர் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐபிஎல் தொடருக்கு கிடைத்துள்ள இந்த வரவேற்பை கருத்தில்கொண்டு 8 அணிகள் மட்டுமல்ல இனி எதிர்காலத்தில் 10 அணிகள் தொடர்ச்சியாக விளையாடும் என்றும் அவர்கள் முடிவு செய்திருந்தனர்.

ipl trophy

மேலும் பிசிசிஐ தலைவர் கங்குலி தலைமையிலான ஒரு அணியும், செயற்குழு தலைவர் ஜெய்ஷா அவர்களின் தலைமையில் ஒரு அணியும் கொண்டு ஒரு நட்பு ரீதியிலான கிரிக்கெட் போட்டியை அகமதாபாத் நகரில் உள்ள மோதிரா மைதானத்தில் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். இந்த போட்டி 26ம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத் தக்கது. இந்த போட்டியில் மீண்டும் சௌரவ் கங்குலி களம் இறங்கி விளையாட உள்ளார் என்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement