ஐ.பி.எல் ரத்து செய்யப்பட்டால் இந்திய வீரர்களின் சம்பளம் குறைக்கப்படுமா ? – பி.சி.சி.ஐ வெளியிட்ட தகவல்

Ind
- Advertisement -

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து உலக அளவில் எந்தவொரு கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. இந்தியாவிற்கு வந்த தென்ஆப்பிரிக்கா அணியும் கூட அந்த தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் திருப்பி அனுப்பப்பட்டது. மேலும் அந்த தொடர் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.

rsa 2

- Advertisement -

தற்போது மீண்டும் எப்போது கிரிக்கெட் போட்டி துவங்கும் என்பது யாராலும் கூற முடியாத நிலையில் உள்ளது. ஐபிஎல் தொடரரும் அடுத்த சில மாதங்களுக்கு நடைபெறாமல் இருக்கும் என்றுதான் தெரிகிறது . ஐரோப்பிய நாடுகளிலும் கால்பந்து தொடர்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் தொடரே அடுத்த வருடத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை பி.சி.சி.ஐ தள்ளிவைத்துள்ளதால் பெரும் பொருள் இழப்பு ஏற்படும். இந்த நிதி இழப்பை சரி கட்டுவதற்காக கிரிக்கெட் விளையாடாமல் இருக்கும் வீரர்களின் ஊதியத்தை பிடிக்கலாமா என்பது குறித்து கருத்து நிலவி வருகிறது. இது குறித்து கூறியுள்ள பிசிசிஐ பொருளாளர் பேசியதாவது :

Ipl cup

நாங்கள் வீரர்களின் ஊதியத்தை பிடிப்பது குறித்து இன்னும் பேசவில்லை. இந்த விடயம் குறித்த எந்த ஒரு கூட்டமும் நடைபெறவில்லை. தற்போதைய சூழலில் ஐ.பி.எல் தொடர் குறித்த சாத்தியங்களை மட்டுமே உற்றுநோக்கி வருகிறோம். மேலும் நிலைமை எவ்வாறு உள்ளதோ அதற்கு ஏற்றமாதிரி இந்த தொடர் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

- Advertisement -

இந்த பின்னடைவுக்குப் பின்னர் என்ன நடவடிக்கை எடுத்தாலும் வீரர்களின் நலனை கருத்தில் கொண்டுதான் எடுப்போம். எந்த ஒரு நடவடிக்கை இருந்தாலும் நன்றாக சிந்தித்து விட்டத்தான் எடுப்போம். தற்போது நாங்கள் அது குறித்து சிந்திக்கவும் இல்லை. பேசவும் இல்லை. இது குறித்து பின்னர் விவாதிப்போம் என்று கூறியுள்ளார்

மேலும் ஊதிய குறைப்பு இல்லையென்றாலும் இந்த வருட ஐ.பி.எல் ரத்து செய்யப்பட்டால் இந்த வருடத்திற்கான ஐ.பி.எல் சம்பளம் வீரர்களுக்கு வழங்கப்படமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement