நீங்க சொன்ன கேட்கணுமா? அதெல்லாம் முடியாது – பிசிசிஐ முடிவை எதிர்க்க தயாராகும் ஐபிஎல் அணிகள், அதிரடி அறிவிப்பு

Virat Kohli Rohit Sharma MI vs RCB
- Advertisement -

2023 புத்தாண்டில் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலகக் கோப்பையையும் ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலிலும் வென்று சாதனை படைக்க இந்திய கிரிக்கெட் அணியினர் போராட உள்ளனர். ஏனெனில் 2022இல் சாதாரண இருதரப்பு தொடர்களை வென்ற இந்தியா வழக்கம் போல ஆசிய மற்றும் டி20 உலக கோப்பை ஆகிய அழுத்தம் வாய்ந்த பெரிய தொடர்களில் சொதப்பலாக செயல்பட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.  இருப்பினும் 2023 உலக கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான நட்சத்திர வீரர்கள் அடங்கிய முதன்மை அணி விளையாட உள்ளது.

INDia

- Advertisement -

முன்னதாக கடந்த வருடம் பும்ரா, தீபக் சஹர், ஜடேஜா ஆகிய முக்கிய வீரர்கள் டி20 உலக கோப்பைக்கு முன்பாக கடைசி நேரத்தில் காயத்தால் வெளியேறியது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. மேலும் ஏற்கனவே காயமடைந்திருந்த அவர்கள் முக்கிய நேரத்தில் மீண்டும் காயமடைந்து வெளியேறியது இந்திய அணியில் தற்சமயத்தில் நல்ல ஃபிட்னஸ் கடைபிடிக்கப்படுவதில்லை என்பதை காட்டியது. குறிப்பாக முன்னுதாரணமாக இருக்க வேண்டிய கேப்டன் ரோஹித் சர்மா முழு உடல் தகுதியை கடைபிடிக்காததால் பெரும்பாலும் காயம் மற்றும் பணிச்சுமை என்ற பெயரில் ஓய்வெடுத்தார்.

எதிர்க்கும் ஐபிஎல் அணிகள்:
அதனால் வரலாற்றில் 7 வெவ்வேறு வீரர்களை கேப்டனாக பயன்படுத்த வேண்டிய நிலைமை இந்தியாவுக்கு ஏற்பட்டது. ஆனால் இதே வீரர்கள் ஐபிஎல் தொடரில் பணத்துக்காக எந்த போட்டியையும் தவற விடாமல் விளையாடுவது ரசிகர்களை கடுப்பாக வைத்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முழு உடல் தகுதியை பெறுவதற்கு யோ-யோ டெஸ்ட் அவசியம் என்று அறிவித்துள்ள பிசிசிஐ 2023 உலகக்கோப்பையில் விளையாடப் போகும் உத்தேச 20 வீரர்களை தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் ஐபிஎல் தொடரில் முழுமையாக விளையாடாமல் தேவையான ஓய்வெடுப்பதற்காக அந்தந்த அணி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வழி வகுக்கப்படும் என்று நேற்று கூறியது.

IPL 2022

இந்நிலையில் பல கோடிகள் செலவழித்து தங்களுக்காக வாங்கப்பட்டுள்ள வீரர்கள் ஐபிஎல் தொடரில் இவ்வளவு போட்டிகள் தான் விளையாட வேண்டும் என்று ஐபிஎல் ஒப்பந்த விதிமுறைகளை தாண்டி பிசிசிஐ தங்களை நெறிப்படுத்த முடியாது என ஐபிஎல் அணிகள் முடிவெடுத்துள்ளன. இது பற்றி பெயர் வெளியிட விரும்பாத ஒரு ஐபிஎல் அணி நிர்வாகம் சார்பில் அதன் தலைமை நிர்வாக அதிகாரி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஐபிஎல் அணி நிர்வாகங்களிடம் எந்த வீரையாவது எந்த போட்டிக்காவது ஓய்வெடுக்குமாறு பிசிசிஐ சொல்ல முடியாது. வேண்டுமானால் அவர்கள் குறிப்பிட்ட வீரர்களின் பணிச்சுமையை கவனிக்கலாம். அவர்களுக்கு நாங்களும் தேவையான தகவல்களை கொடுப்போம். ஆனால் அவர்கள் குறிப்பிட்ட ஒரு வீரர் இவ்வளவு போட்டியில் தான் விளையாட வேண்டும் அல்லது இவ்வளவு ஓவர்களை தான் வீச வேண்டும் என்று எங்களுக்கு சொல்ல முடியாது” என்று கூறினார்.

Rcbvsmi

இதே கருத்து தான் இதர ஐபிஎல் அணி நிர்வாகங்களும் முன் வைப்பதால் நட்சத்திர வீரர்களை உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் குறிப்பிட்ட ஐபிஎல் போட்டிகளில் ஓய்வெடுக்க வைக்க நினைக்கும் பிசிசிஐ எண்ணம் நிறைவேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த இடத்தில் பிசிசிஐ எதிர்காலத்தை பற்றி சிந்திக்காமல் செயல்பட்டுள்ளதும் தெரிய வருகிறது. அதாவது ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து நாடுகளில் தங்களது முதன்மை வீரர்களை குறிப்பிட்ட கட்டுப்பாட்டுக்கு சம்மதம் தெரிவித்தால் மட்டுமே இது போன்ற பிரீமியர் லீக் டி20 தொடர்களில் பங்கேற்க விளையாடுவதற்கு அனுமதி கொடுத்துள்ளது.

இதையும் படிங்கIND vs SL : கண்டிப்பா அதிர்ஷ்டத்துடன் அந்த உலக சாதனையை என்னால் உடைக்க முடியும் – உம்ரான் மாலிக் அதிரடி நம்பிக்கை

குறிப்பாக நாட்டுக்காக தேவைப்படும் போது பணத்துக்காக விளையாடும் தொடரில் தேவைப்பட்டால் ஓய்வெடுக்கும் வகையில் ஆரம்பத்திலேயே அந்நாட்டு வாரியங்கள் தங்களது வீரர்களிடம் ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கியுள்ளன. ஆனால் வருங்காலத்தில் இப்படி நடைபெறும் என்று கருதாமல் ஆரம்ப காலங்களில் அது போன்ற விதிமுறைகளையும் ஒப்பந்தங்களையும் உருவாக்காமல் விட்ட பிசிசிஐ தற்போது கடிவாளம் போடுவதால் ஐபிஎல் அணிகள் எதிர்க்கின்றன. இருப்பினும் ஐபிஎல் என்பதே பிசிசிஐ நடத்தும் தொடர் என்பதால் இறுதியில் பிசிசிஐ தான் இந்த விஷயத்தில் வெற்றி காணும் என்று நம்பலாம்.

Advertisement