இந்திய தென்னாபிரிக்க போட்டிகள் நடக்காது. மீதி 2 போட்டிகளும் ரத்து. பி.சி.சி.ஐ அதிரடி – ரசிகர்கள் அதிர்ச்சி

Ganguly
- Advertisement -

உலகையே அச்சுறுத்தி வரும் ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் காரணமாக 5000 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் உலக அளவில் பரவி வரும் இந்த வைரஸ் தற்போது இந்தியாவிலும் தனது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

70-க்கும் மேற்பட்ட நபர்கள் இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையொட்டி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் எடுக்கப்ப்பட்டு வருகின்றன.

மேலும் இந்த நோயின் காரணமாக விளையாட்டுப் போட்டிகளை பல நாடுகள் ஒத்திவைத்துள்ளது. இந்தியாவும் தற்போது நடைபெற இருந்த விளையாட்டு போட்டிகளை ஒத்திவைத்துள்ளது. இந்நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருந்தது.

IndvsRsa

இதன் முதல் போட்டி தர்மசாலாவில் நடைபெற இருந்தது. ஆனால் அன்று மழை பெய்த காரணத்தால் டாஸ் கூட போடமுடியாமல் போட்டி ரத்தானது .அதன் பிறகு தற்போது மார்ச் 15ஆம் தேதி லக்னோவில், 18ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற இருந்த மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் தற்போது பிசிசிஐ ரத்து செய்துள்ளது.

- Advertisement -

இந்த தகவல் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தாலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏதும் நிகழக் கூடாது என்ற காரணத்தினால் பிசிசிஐ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. போட்டிகளை நடத்தாமல் இருந்தாலும் ரசிகர்களின் நலனே முக்கியம் என்று பிசிசிஐ தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Ganguly

ஏற்கனவே ஐ.பி.எல் தொடரை தள்ளிவைத்த பி.சி.சி.ஐ தற்போது இந்த தொடரையும் ரத்து செய்ததால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement