ஜிம்பாப்வே அணி இந்தியா வரக்கூடாது. இலங்கை அணியை விளையாட கூப்பிடுங்க – பி.சி.சி.ஐ அதிரடி

Zimbabwe
- Advertisement -

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி-20 தொடரை நிறைவு செய்து அந்த அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. அதன் பிறகு இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் விளையாட உள்ளது.

- Advertisement -

இந்த தொடர் முடிந்து இந்திய அணி அடுத்ததாக 2020 ஆம் ஆண்டு துவக்கத்தில் அதாவது ஜனவரி மாதம் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் என்று ஏற்கனவே அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ஜிம்பாப்வே அணிக்கு எதிரான அந்த தொடரை பி.சி.சி.ஐ நிராகரித்துள்ளது.

அதன்காரணம் யாதெனில் ஜிம்பாப்வே அணிக்கு ஐசிசி கிரிக்கெட் விளையாடும் சர்வதேச அங்கீகாரத்தை ரத்து செய்ததன் காரணமாக இந்திய அணிக்கு ஜிம்பாப்வே அணியுடன் போட்டிகளில் பங்கேற்க்க விருப்பமில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் ஐசிசி நிராகரிக்கப்பட்ட ஜிம்பாப்வே அணிக்கு பதிலாக இலங்கை அணியை இந்தியாவிற்கு சுற்றுபயணம் வரவழைத்து டி20 தொடரில் பங்கேற்க இருக்கிறது.

sl

அதன்படி இலங்கை அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இந்திய நிர்வாகம் பிசிசிஐ இலங்கை அணியுடன் கலந்துரையாடி உறுதி செய்துள்ளது. அதன்படி இலங்கை அணி ஜனவரி மாதம் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஜனவரி 5, 7 மற்றும் 10 ஆகிய 3 தேதிகளில் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணியுடன் இந்தியா விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement