முழுமையாக ரத்தாகிறதா ஐபிஎல் தொடர் ? கூட்டத்தை ரத்து செய்து பதிலை சொன்ன பிசிசிஐ – அதிகாரபூர்வ அறிவிப்பு

Ipl cup
- Advertisement -

கரோனா வைரஸ் உலகம் முழுவதும் அதிகமாக பரவி வருவதால் பெரும் விளையாட்டுப்போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. ஐரோப்பாவில் நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் போன்ற கால்பந்து தொடரும் அமெரிக்காவில் நடைபெறும் கூடைப்பந்தாட்ட தொடரும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் ஐபிஎல் தொடர் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15ஆம் தேதி வரை இதற்கான தேதி விதிக்கப்பட்டது.

corona 1

- Advertisement -

ஆனால், தற்போது வரை கரோனா வைரஸின் தாக்கம் குறையவில்லை. தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டேதான் சென்று கொண்டிருக்கிறது. அதனை தொடர்ந்து மத்திய மாநில அரசுகள் கெடுபிடிகளை மிகவும் வலுவாக்கி வருகின்றன.

மேலும் உலகம் முழுவதும் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர். வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் ,இது குறித்து விவாதிக்க வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நடப்பதாக இருந்த கூட்டத்தை பிசிசிஐ ரத்து செய்துள்ளது.

Ganguly

இதனால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடக்கும் என்ற நம்பிக்கையும் போயுள்ளது.இது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில் : ஒலிம்பிக் போட்டிகள் ஒரு ஆண்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதனை விட மிகச் சிறிய தொடர்பான ஐபிஎல் தொடர் நடத்துவது சிறந்ததல்ல.

- Advertisement -

மேலும், அவ்வாறு நடத்தினால் குறைந்த போட்டிகளில் நடத்தக்கூடும். இது நன்றாக இருக்காது மேலும் அரசாங்கமும் வெளிநாட்டு வீரர்களுக்கு அனுமதி அளிப்பதில்லை என்று கூறியுள்ளார். இப்படி பார்த்தால் இந்த வருடம் ஐபிஎல் தொடர் கண்டிப்பாக நடக்காது என்றே தெரிகிறது.

Ganguly

அதனால் இந்த ஐ.பி.எல் தொடர் நடைபெறாமல் போவதற்கே அதிக வாய்ப்புள்ளது. மேலும் இந்த தொடரை தள்ளி வைக்கவும் வாய்ப்பில்லை என்றுதான் தெரிகிறது. ஆகவே இந்த தொடர் நடைபெறாமல் போவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement