உங்க இஷ்டத்துக்கு சான்ஸ் தர முடியாது அதை செஞ்சுட்டு வாங்க – ஜடேஜாவிடம் ஸ்ட்ரிக் காட்டிய பிசிசிஐ, காரணம் இதோ

Jadeja
- Advertisement -

2023 புத்தாண்டில் இலங்கைக்கு எதிராக விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக நியூஸிலாந்துக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்கிறது. அத்துடன் பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரிலும் இந்தியா களமிறங்குகிறது. இந்த அடுத்தடுத்த தொடர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்கான அணி மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற அத்தொடரில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள இந்தியாவின் வெற்றிக்கு சுழல் பந்து வீச்சுத்துறை வலுவானதாக இருப்பது மிகவும் அவசியமாகிறது.

jadeja 1

- Advertisement -

காரணம் இந்திய மண்ணில் எப்போதுமே சுழல் பந்து வீச்சு அதிகமாக எடுபடும் என்பதுடன் ஆஸ்திரேலியாவை போன்ற வெளிநாட்டு பேட்ஸ்மேன்கள் தரமான சுழலில் தடுமாறுவார்கள். அப்படிப்பட்ட நிலையில் மூத்த அனுபவமிக்க சுழல் பந்து ஜோடியான அஸ்வின் – ஜடேஜா ஆகியோர் இத்தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு சவாலை கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் தமிழக வீரர் அஷ்வின் இடம் பிடித்துள்ள நிலையில் ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்படவில்லை. கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இந்தியாவுக்காக விளையாடி வரும் அவர் 2019 உலக கோப்பைக்கு பின் அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி உலக அளவில் நம்பர் ஒன் சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டராக ஜொலிக்கிறார்.

போய்ட்டு வாங்க:
அந்த வரிசையில் 2022 ஆசிய கோப்பையில் விளையாடிய அவர் காயத்தை சந்தித்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் பங்கேற்கவில்லை. அவர் இல்லாதது 2 தொடர்களிலுமே இந்தியாவுக்கு தோல்வி கொடுத்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியேறிய அவர் தற்போது குணமடையும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் காயமடைந்து முழுமையாக 3 மாதத்தை கடந்து விட்ட அவர் ஏற்கனவே குணமடைந்து விட்ட நிலையில் சமீபத்தில் குஜராத்தில் நடைபெற்று முடிந்த தேர்தலில் தமது மனைவியின் அரசியல் பிரசாரத்தில் பங்கேற்றார்.

Rivaba Jadeja

அதை அறிந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்து “அக்சர் பட்டேல் இருக்கிறார் நீங்கள் பொறுமையாகவே வாருங்கள்” என்று விமர்சனத்தை வெளிப்படுத்தினர். இந்நிலையில் காயத்திலிருந்து குணமடைந்தாலும் உள்ளூர் கிரிக்கெட்டில் கூட விளையாடாமல் இருக்கும் ஜடேஜாவின் தற்போதைய ஃபார்ம் என்ன என்பது பற்றி தெரியாத காரணத்தாலேயே ஆஸ்திரேலிய தொடரில் தேர்வு செய்யப்படவில்லை என்று புதிய செய்திகள் வெளியாகியுள்ளது. அதனால் தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பையில் விளையாடி எந்தளவுக்கு ஃபார்மில் இருக்கிறீர்கள் என்பதை நிரூபிக்குமாறு ஜடேஜாவை பிசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

இது பற்றி பிசிசிஐ தலைமை அதிகாரி பேசியது பின்வருமாறு. “தற்போது எந்தளவுக்கு உடல் தகுதியுடன் பார்மில் உள்ளார் என்பதை பற்றி தெரியாத காரணத்தால் ஜடேஜாவை குறைந்தபட்சம் ஒரு உள்ளூர் போட்டியில் விளையாடுமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். அவர் மட்டும் அதை செய்து விட்டு முழு தகுதியுடன் குணமடைந்து வந்தால் இந்திய மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசையில் இருக்கும் இடது கை பேட்ஸ்மேன் பிரச்சனை தீர்ந்து விடும். அத்துடன் நம்மால் 5 பந்து வீச்சாளர்களை பயன்படுத்தி எதிரணிக்கு அச்சுறுத்தலை கொடுப்பதற்கான வாய்ப்புகளும் பிரகாசமாகும்” என்று கூறினார்.

jadeja 2

அதாவது ஏற்கனவே ஃபார்மில் இருந்த ராகுல் சந்தித்த காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்து திரும்பினாலும் பார்மை இழந்து தடுமாறுவது போல் ஜடேஜாவும் தடுமாறக்கூடாது என்பதற்காக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடுமாறு பிசிசிஐ அவரை அறிவுறுத்தியுள்ளது. மேலும் என்னதான் நட்சத்திர வீரராக இருந்தாலும் உள்ளூர் கிரிக்கெட்டில் அபாரமாக செயல்பட்ட சர்ப்ராஸ் கான் போன்ற இளம் வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதையும் படிங்க: IND vs SL : அதான் கப் ஜெயிச்சாச்சு இல்ல. 3 ஆவது போட்டிக்கான அணியில் ஏற்படவுள்ள மாற்றம் – விவரம் இதோ

எனவே உள்ளூர் கிரிக்கெட்டிலும் விளையாடாமல் பயிற்சிகளும் செய்யாமல் அரசியல் பிரச்சாரம் செய்து விட்டு நேரடியாக விருப்பத்திற்கேற்றார் போல் இந்திய அணியில் விளையாட முடியாது என்ற நோக்கத்திலேயே ஜடேஜாவுக்கு பிசிசிஐ இப்படி ஒரு கட்டுப்பாட்டை விதித்துள்ளது. அத்துடன் அக்சர் பட்டேல் ஏற்கனவே தயாராக இருப்பதால் உள்ளூர் போட்டியில் விளையாடி விட்டு பொறுமையாகவே வாருங்கள் என்று ஜடேஜாவிடம் பிசிசிஐ கண்டிப்புடன் நடந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement