நீங்க அங்கேயே இருங்க பி.சி.சி.ஐ போட்ட உத்தரவு.. இந்திய அணியுடன் இணைந்த தேவ்தத் படிக்கல் – என்ன காரணம்?

Padikkal
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனக்கு இரண்டாவது குழந்தை பிறந்ததின் காரணமாக இதுவரை ஆஸ்திரேலியா பயணிக்காமல் இருந்து வருகிறார். அதன் காரணமாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நவம்பர் 22-ஆம் தேதி துவங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் அவர் விளையாட மாட்டார் என்று தெரிகிறது. இதன் காரணமாக பும்ரா இந்த முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை வழிநடத்த இருக்கிறார்.

முதன்மை இந்திய அணியுடன் இணைந்த தேவ்தத் படிக்கல் :

ரோகித் சர்மா இப்படி முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்காதது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படும் வேளையில் மற்றொரு நட்சத்திர வீரரான சுப்மன் கில்லும் பயிற்சியின் போது கட்டைவிரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக முதல் போட்டியில் விளையாட மாட்டார் என்று தெரிகிறது.

- Advertisement -

இதன் காரணமாக இந்திய அணி இந்த இடங்களை எவ்வாறு நிரப்பப்போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டிகள் முடிவடைந்த வேளையில் இந்திய ஏ அணியில் இடம்பெற்றிருந்த வீரர்கள் தாயகம் திரும்பி உள்ளனர்.

ஆனால் இந்திய ஏ அணியில் இடம்பெற்றிருந்த இளம் வீரரான தேவ்தத் படிக்கல் மட்டும் தற்போது முதன்மை இந்திய அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடுமாறு பிசிசிஐ-யின் மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். ஏனெனில் இரண்டு முக்கிய வீரர்கள் இந்திய அணியில் இல்லாத வேளையில் அணியின் பேலன்ஸை சமன் செய்யவே பிசிசிஐ படிக்கலை இந்திய அணியுடன் இணைந்து பயிற்சியை மேற்கொள்ள வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இப்படி படிக்கல் இந்திய அணியுடன் இணைக்கப்பட காரணம் யாதெனில் : சமீபத்தில் ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக நடைபெற்ற பயிற்சி போட்டியில் மற்ற நட்சத்திர வீரர்கள் கடுமையாக தடுமாற்றத்தை சந்தித்த வேளையில் படிக்கல் மட்டும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இதையும் படிங்க : ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தணும்னா விராட் கோலி அதை செய்யனும் – மைக்கல் கிளார்க் கருத்து

இதன் காரணமாகவே அவரை முதன்மை இந்திய அணியில் இணைத்த இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ தற்போது அவரை பயிற்சியில் ஈடுபட்டவைத்து வைத்துள்ளது. அணிக்கு தேவைப்படும் பட்சத்தில் படிக்கல் பிளேயிங் லெவனில் இறங்கவும் வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement