ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது எதிர்வரும் நவம்பர் 22-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக இரு அணி வீரர்களும் அங்கு தீவிர வலைப்பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியா ஜெயிக்கனும்னா என்ன பண்ணனும் :
இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இந்த தொடர் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் வேளையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், கேப்டனுமான மைக்கல் கிளார்க் இந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெற வேண்டுமெனில் அதற்கு விராட் கோலி தான் உதவ வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ஆஸ்திரேலிய மண்ணில் எப்பொழுதுமே இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராத் கோலியின் பேட்டிங் என்பது அசாதாரணமானது. இன்னும் சொல்லப்போனால் இந்திய மண்ணை விட ஆஸ்திரேலியா மண்ணில் தான் விராட் கோலி மிகச் சிறப்பாக விளையாடியிருக்கிறார்.
எனவே இந்திய அணி ஐந்துக்கு பூஜ்யம் (5-0) என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணியை ஜெயிக்க முடியும் என்று நான் கூறுவதை விட இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றி பெற வேண்டுமெனில் விராட் கோலியின் பேட்டிங் சிறப்பாக இருக்க வேண்டும். விராட் கோலி ரன் குவித்தால் நிச்சயம் இந்திய அணியால் இம்முறையும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்த தொடரை கைப்பற்ற முடியும்.
எனவே விராட் கோலி தான் இந்த தொடரில் இந்திய அணிக்கு மிக முக்கியமான வீரராக இருக்கப் போகிறார் என்று தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : விராட் கோலி ஒருபுறம் ரன் குவித்தால் மற்றொருபுறம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்டும் கணிசமாக ரன் குவிக்க வேண்டும்.
இதையும் படிங்க : 93/5 டூ 210/7.. போராடி நியூஸிலாந்தை சாய்த்த இலங்கை.. 6க்கு 6.. வரலாறு காணாத மறுமலர்ச்சி வெற்றி
ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது பார்ம் எப்போதுமே மிகச் சிறப்பாக இருந்து வருகிறது. அவர்கள் இருவரும் பேட்டிங்கில் கை கொடுக்க வேண்டும் அதேபோன்று பும்ரா பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று கிளார்க் தெரிவித்திருந்தார். ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 6 சதங்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



