ட்ரீம் 11 நிருவனத்திற்கு டைட்டில் ஸ்பான்சர் கொடுத்தாலும் அதில் இப்படி ஒரு கண்டிஷன் இருக்காம் – பி.சி.சி.ஐ தகவல்

Dream-xi

ஐபிஎல் தொடர் இந்த வருடம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது இதற்காக அனைத்து அணிகளும் தற்போது பயிற்சிகளை மேற்கொண்டு ஒன்றன்பின் ஒன்றாக துபாய் பயணத்தை துவங்கியுள்ளது. இந்த வருட ஐபிஎல் தொடர் மட்டும் நடக்காமல் போய் இருந்தால் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு 4,000 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கும்.

ipl

கரோனா வைரஸ் காரணமாக இருந்த தடைகளை எல்லாம் தாண்டி தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் மொத்தமுள்ள 60 போட்டிகளும் நடைபெற தயார் செய்யப்பட்டுள்ளது. இழப்புகளை சரி கட்டுவதற்காக எப்படியாவது குறைந்த செலவில் ஐபிஎல் தொடரை நடத்தி விடலாம் என்று பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

இதற்காக துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய 3 நகரங்களில் மட்டும் முழு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி முழுத்தொடரையும் முடிக்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்திய சீன நாடுகளுக்கு இடையே உள்ள அரசியல் சூழ்நிலை காரணமாக சீன நிறுவனமான விவோ நிறுவனத்துடன் இருந்த டைட்டில் ஸ்பான்சரை ஐ.பி.எல் நிர்வாகம் ரத்து செய்தது.

Dubai

இந்த நேரத்தில் ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்சராக இருந்த சீனாவின் விவோ மொபைல் நிறுவனத்தை அடுத்து புதிய ஸ்பான்சர்ஷிப் நிறுவனங்களை டைட்டில் ஸ்பான்சர் செய்ய பிசிசிஐ ஏலத்திற்கு அழைத்து இருந்தது. அதன் பின்னர் இந்த ஒப்பந்தத்தை ஆன்லைன் சூதாட்ட நிறுவனமான ட்ரீம் லெவன் 222 கோடி ரூபாய்க்கு கோரி வெற்றியை பெற்றது. ஏற்கனவே விவோ 440 கோடி கொடுத்து வந்ததால் இந்த ஒப்பந்தத்தை மேலும் இரண்டு ஆண்டுகள் நீடிக்க கூறியது.

- Advertisement -

Dream-11-1

ஆனால் ஆண்டுக்கு 240 கோடி மட்டுமே தருவோம் என்று ட்ரீம் 11 நிறுவனம் தெரிவிக்க அதனை ஐ.பி.எல் நிர்வாகம் மறுத்தது. இதன் காரணமாக இந்த வருடம் மட்டும் ட்ரீம் லெவன் ஐபிஎல் தொடருக்கு டைட்டில் ஸ்பான்சர்ஷிப் செய்யப்போகிறது. இதனை ஐபிஎல் நிர்வாகம் தனது சமூக வலைதளத்தில் அதிகாரபூர்வமாக ட்ரீம் லெவன் ஐபிஎல் என்று அறிவித்துள்ளது.