ஆஸி, இங்கிலாந்து உட்பட 2024 வரை சொந்த மண்ணில் இந்தியா களமிறங்கும் 4 புதிய தொடர்கள் – பிசிசிஐ வெளியிட்ட அட்டவணை இதோ

IND vs ENg Rohit Sharma Jos Buttler
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணியாக திகழ்ந்து வரும் இந்தியா தற்போது வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் விளையாடி வருகிறது. அதை முடித்துக்கொண்டு அயர்லாந்துக்கு சென்று 3 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவிட்டு நாடு திரும்பும் இந்தியா அடுத்ததாக 2023 ஆசிய மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பையில் விளையாட உள்ளது. இந்நிலையில் 50 ஓவர் உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் 2023 ஆசியக் கோப்பைக்கு முன்பாக வலுவான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா விளையாடும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

குறிப்பாக 5 உலகக் கோப்பைகளை வென்று வரலாற்றின் வெற்றிகரமான அணியாக திகழும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த பிப்ரவரியில் சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 2 – 1 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. அந்தளவுக்கு வலுவான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2023 உலகக் கோப்பைக்கு சில வாரங்கள் முன்பாக விளையாடுவது இந்திய அணி முழுமையாக தயாராக உதவும் என்ற நோக்கத்துடன் பிசிசிஐ இந்த தொடருக்கு ஏற்பாடு செய்துள்ளது.

- Advertisement -

அட்டவணை வெளியீடு:
அதை தொடர்ந்து சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலகக் கோப்பையை முடித்துக் கொண்டு மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2024 டி20 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா களமிறங்குவதற்கான அட்டவணையையும் பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதை தொடர்ந்து 2024 புத்தாண்டில் ஜனவரி மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 2023 ஜூலை மாதம் நடைபெறுவதாக இருந்து ஒத்திவைக்கப்பட்ட அந்த ஆப்கானிஸ்தான் தொடரை 2024 புத்தாண்டின் துவக்கத்திலேயே பிசிசிஐ நடத்துகிறது. அதன் பின் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக வலுவான இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இந்தியா விளையாடும் என்று அறிவித்துள்ள பிசிசிஐ இந்த அனைத்து அட்டவணைகளையும் முழுமையாக வெளியிட்டுள்ளது.

- Advertisement -

அதில் 2023 உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் வாய்ப்பு பெறாத மொஹாலி, கௌகாத்தி, திருவனந்தபுரம், விசாகப்பட்டினம், ராஜ்கோட் ராஞ்சி போன்ற நகரங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் ஒருநாள் தொடருக்கான அட்டவணை (2023):
செப்டம்பர் 22, மதியம் 1.30 மணி : முதல் ஒன்டே, மொகாலி
செப்டம்பர் 24, மதியம் 1.30 மணி : முதல் ஒன்டே, இந்தூர்
செப்டம்பர் 27, மதியம் 1.30 மணி : ராஜ்கோட்

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான அட்டவணை (2023):
நவம்பர் 23, இரவு 7.00 மணி : முதல் டி20, விசாகப்பட்டினம்
நவம்பர் 26, இரவு 7.00 மணி : 2வது டி20, திருவனந்தபுரம்
நவம்பர் 28, இரவு 7.00 மணி : 3வது டி20, கௌகாத்தி
டிசம்பர் 1, இரவு 7.00 மணி : 4வது டி20, நாக்பூர்
டிசம்பர் 3, இரவு 7.00 மணி : 5வது டி20, ஹைதராபாத்

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான அட்டவணை (2024):
ஜனவரி 11 : முதல் டி20, மொகாலி
ஜனவரி 14 : 2வது டி20, இந்தூர்
ஜனவரி 17 : 3வது டி20, பெங்களூரு

இதையும் படிங்க:IND vs WI : என்னை பொறுத்தவரை இந்த டெஸ்ட் தொடருக்கான தொடர்நாயகன் விருது இவருக்குத்தான் – ஜாஹீர் கான் கருத்து

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அட்டவணை (2024):
ஜனவரி 25 – 29 : முதல் டெஸ்ட், ஹைதராபாத்
பிப்ரவரி 2 – 6 : 2வது டெஸ்ட், விசாகப்பட்டினம்
பிப்ரவரி 15 – 19 : 3வது டெஸ்ட், ராஜ்கோட்
பிப்ரவரி 23 – 27 : 4வது டெஸ்ட், ராஞ்சி
மார்ச் 7 – 11 : 5வது டெஸ்ட், தரம்சாலா

Advertisement