வரலாற்றில் முதல் முறையாக நம்ம ஊரில் ஐ.பி.எல் ஏலம். என்னைக்கு தெரியுமா ? – விவரம் இதோ

auction-1

2008ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் ஆண்டுதோறும் மே மாதத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் இந்த ஆண்டும் நடைபெற இருக்கிறது. ஐபிஎல் தொடரை இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இதுவரை 13 ஐபிஎல் சீசன்கள் நடைபெற்று இருக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை கோப்பையை வென்று யாரும் அசைக்க முடியாத அணியாக திகழ்கிறது.

Rohith

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று முறை கோப்பையை வென்று இருக்கிறது. 2021ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் 14வது ஐபிஎல் சீசன் வருகின்ற ஏப்ரல், மே மாதத்தில் நடைபெறும் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கான பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

14 வது ஐபிஎல் சீசனின் ஏலத்தை பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. எனவே இதற்கு முன்னர் அனைத்து அணிகளும் தங்கள் அணியில் இருந்து வெளியேற்றப்படும் மற்றும் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை ஜனவரி 20ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

IPL

அதன்படி அனைத்து அணிகளும் தங்கள் அணியின் ஒப்பந்தம் முடிந்து வெளியேறும் வீரர்களின் பட்டியலையும், மோசமாக விளையாடியதால் வெளியேற்றப்படும் வீரர்களையும் அறிவித்திருக்கிறது.
இவ்வாறு வெளியேற்றப்பட்ட வீரர்கள் அனைவரும் பிப்ரவரி மாதம் நடைபெறும் ஏலத்தின் மூலம் மற்ற அணியில் தேர்வு செய்யப்படுவார்கள்.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான 2021 ஐபிஎல் தொடருக்கான ஏலம் பிப்ரவரி 18ஆம் தேதி நடைபெறும் என்றும் இந்த ஏலத்தில் 8 அணிகளும் சேர்த்து 57 வீரர்களை விடுவிக்கப்பட்ட நிலையில் மேலும் பல வீரர்கள் ஏலத்தில் இருப்பார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த ஐபிஎல் ஏலம் சென்னையில் நடைபெற உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐபிஎல் வரலாற்றிலேயே சென்னையில் முதல் முறையாக ஐ.பி.எல் ஏலம் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.