இங்கிலாந்து 2025 தொடருக்கான அட்டவணையை வெளியீடு.. 2022இல் தவறிய சரித்திரத்தை இந்தியா படைக்குமா?

IND vs ENG
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக செப்டம்பர் மாதம் வங்கதேசத்துக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன் பின் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா களமிறங்க உள்ளது. அதைத் தொடர்ந்து நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் இந்தியா அங்கு 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடுகிறது.

அந்தத் தொடர்களில் நல்ல வெற்றிகளை பெறும் பட்சத்தில் ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் தொடர்ந்து 3வது முறையாக விளையாடத் இந்தியா தகுதி பெறும். இந்நிலையில் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்குப் பின் இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் டெஸ்ட் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

- Advertisement -

இங்கிலாந்து தொடர்:

5 போட்டிகள் கொண்ட அந்த தொடர் ஹெண்டிங்லே, பர்மிங்கம், லண்டன், மான்செஸ்டர் மற்றும் ஓவல் லண்டனில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது அந்தத் தொடர் 2027 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையில் இந்தியா விளையாடப் போகும் முதல் தொடராக அமைய உள்ளது. வேகம் மற்றும் ஸ்விங் ஆகியவற்றுக்கு சாதகமான இங்கிலாந்து மண்ணில் இந்தியா தொடர்ச்சியாக வெற்றிகளை பெற தடுமாறி வருகிறது.

கடைசியாக கடந்த 2007ஆம் ஆண்டு ராகுல் டிராவிட் தலைமையில் 1 – 0 என்ற கணக்கில் இங்கிலாந்து மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்றிருந்தது. அதே போல கடைசியாக 2021ஆம் ஆண்டு விராட் கோலி தலைமையில் இங்கிலாந்து மண்ணில் மிரட்டிய இந்தியா 4 போட்டிகளில் முடிவில் 2 – 1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இருப்பினும் கடைசி போட்டி லாக் டவுன் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.

- Advertisement -

இங்கிலாந்து அட்டவணை:

அப்போட்டி மீண்டும் 2022ஆம் ஆண்டு நடைபெற்றது. ஆனால் அப்போது விராட் கோலி கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்த நிலையில் ரோகித் சர்மா உடல் நலக்குறைவால் விலகினார். அதனால் அப்போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா தலைமையில் விளையாடிய இந்தியா தோல்வியை சந்தித்து 2 – 2 (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது.

இதையும் படிங்க: 10 – 20 ஓவர்ஸ்.. நான் பார்த்ததிலேயே அது தான் சிறந்த கோச்சிங்.. கம்பீர் பற்றி இங்கிலாந்து வீரர் பாராட்டு

எனவே 2022இல் தவறிய வெற்றியை 2025இல் பெற்று 2007க்குப்பின் 18 வருடங்கள் கழித்து இங்கிலாந்து மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. அந்த அட்டவணை:
முதல் டெஸ்ட்: ஜூன் 20 – 24, ஹெண்டிங்லே, லீட்ஸ்
2வது டெஸ்ட்: ஜூலை 2 – 6, எட்ஜ்பஸ்டன், பர்மிங்கம்
3வது டெஸ்ட்: ஜூலை 11 – 14, லார்ட்ஸ், லண்டன்
4வது டெஸ்ட்: ஜூலை 23 – 27, ஓல்ட் ட்ராபோர்ட், மான்செஸ்டர்
5வது டெஸ்ட்: ஜூலை 31 – ஆகஸ்ட் 4, ஓவல், லண்டன்

Advertisement