இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்றுள்ளார். தோனி தலைமையில் 2007, 2011 உலகக் கோப்பைகளை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் ஐபிஎல் தொடரில் கேப்டனாக 2 சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார். அத்துடன் கொல்கத்தா அணி 10 வருடங்கள் கழித்து 2024 ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு கௌதம் கம்பீர் ஆலோசகராக முக்கிய பங்காற்றினார்.
அதனால் ராகுல் டிராவிட்டுக்குப் பின் அவரை பிசிசிஐ புதிய பயிற்சியாளராக தேர்ந்தெடுத்துள்ளது. அவருடைய வழிகாட்டுதலில் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் வென்ற இந்தியா ஒருநாள் 27 வருடங்கள் கழித்து இந்தியா தோற்றது. இந்நிலையில் 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் கௌதம் கம்பீர் தமக்கு சிறந்த பயிற்சியை கொடுத்ததாக இங்கிலாந்து வீரர் பிலிப் சால்ட் தெரிவித்துள்ளார்.
சிறந்த கோச்சிங்:
இந்த வருடம் துவக்க வீரராக விளையாடிய அவர் 12 போட்டிகளில் 435 ரன்களை 182 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்து நொறுக்கி வெற்றியில் முக்கிய பங்காற்றினார். அந்த அதிரடிக்கு கௌதம் கம்பீர் கொடுத்த சில ஆலோசனைகள் பற்றி பிலிப் சால்ட் 2024 சியட் விருதுகள் வழங்கும் விழாவில் பேசியது பின்வருமாறு. “முதலில் இந்தியாவுக்கு வந்து ஐபிஎல் வெல்வது உங்களுக்கு தெரிந்ததை விட சிறந்த அனுபவமாக இருக்கும்”
“இந்திய ரசிகர்களுக்கும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கும் கௌதம் கம்பீர் புதியவர் அல்ல என்று நினைக்கிறேன். அவரைப் பற்றி அவரின் சாதனைகள் பேசுகின்றன. அவருடைய ஆலோசகர் பாத்திரத்தில் அவர் சொல்வதை நானும் கேட்டேன். அவர் ஒரு சிறந்த போட்டியாளர். அந்த கண்ணோட்டத்தில் நான் அவருடன் உண்மையில் தொடர்பு கொள்ள முடியும்”
10 – 20 ஓவர்ஸ்:
“அவர் எப்போதும் 99% சதவீதத்தை தாண்டி எப்படி வீரர்கள் அந்த 1% சிறப்பாக இருக்க முடியும், அணியை எப்படி வெற்றிக்கொட்டை தாண்ட வைக்க முடியும் என்பதை தேடுகிறார். அதனால் அவருடன் வேலை செய்வதை விரும்பினேன். குறிப்பாக இந்தியாவில் போட்டியை கடைசி வரை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற அறிவுரையை அவரிடமிருந்து நான் பெற்றேன்”
இதையும் படிங்க: இங்கிலாந்து அணியின் 12வது வீரராக விளையாடிய.. இந்திய வீரரின் மகன்.. வாய்ப்பு கிடைத்தது எப்படி?
“கொல்கத்தாவில் முதல் முறையாக பயிற்சி எடுத்த போது “நீங்கள் ரன்கள் அடிப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் உங்களின் பெரும்பாலான ரன்களை நீங்கள் 10 – 20 அவர்களின் அடிப்பதை நான் விரும்புகிறேன்” என்று சொன்னார். அதற்காக நீங்கள் உங்களுடைய ஆட்டத்தை மெதுவாக துவங்கினாலும் 10 ஓவரிலிருந்து பெரிய ரன்கள் குவிப்பதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் உங்களால் அங்கே வேகமாக ரன்கள் குவிக்க முடியும். அது போன்ற ஆலோசனைகளை கொடுத்த கம்பீரிடம் எனக்கு சிறந்த பயிற்சி கிடைத்தது” என்று கூறினார்.



