குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்கலனா இனிமே இதுதான் நடக்கும் – பி.சி.சி.ஐ போட்டுள்ள புது ரூல்ஸ்

Kohli-1

14வது ஐபிஎல் லீக் தொடர் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி மே 30ம் தேதி வரை நடக்க இருக்கிறது. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் ஒரு சில மாற்றங்களை பிசிசிஐ மேற்கொண்டு வந்துள்ளது. ஆன் ஃபீல்டு அம்ப்பயர்களின் சாப்ட்டு சிக்னல் மற்றும் ஷார்ட் ரன் பிரச்சினை குறித்து மூன்றாம் நடுவரை இறுதி கட்ட முடிவு எடுக்க வேண்டும் என்ற அதிரடி முடிவை பிசிசிஐ கூறியுள்ளது. இந்நிலையில் தற்போது மேலும் ஒரு மாற்றமாக ஆட்டத்தின் கால அவகாசம் குறித்து ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது.

ipl

பிசிசிஐ கொண்டு வந்துள்ள மாற்றத்தின் படி, 90 நிமிடங்களுக்குள் பாதி ஆட்டம் முடிக்கப்பட வேண்டும். அதேபோல் மறுபாதி ஆட்டமும் அதே 90 நிமிடங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். டைம் அவுட் முன்னர் போல 2.30 நிமிடங்கள் ஆகும். இந்த இரண்டு புள்ளி 30 நிமிடங்கள் 90 நிமிடங்களுக்குள் அடங்காது. எனவே ஒவ்வொரு அணியும் தங்களது ஆட்டத்தை 90 நிமிடங்களுக்குள் முடித்தாக வேண்டும். அப்படி முடிக்காத பட்சத்தில் அபராதம் மேற்கொள்ளப்படும் என்று பிசிசிஐ கூறியிருக்கிறது.

முதல் முறை அதிக நேரம் எடுத்துக் கொண்டால் , அணியின் கேப்டனுக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை அதே தவறு நடக்கும் பட்சத்தில் அணியின் கேப்டனுக்கு 24 லட்சம் அபராதம் விதிக்கப்படும், மேலும் அணியின் ஒவ்வொரு வீரர்களுக்கும் 6 லட்சம் அல்லது போட்டிக்கான கட்டணத்திலிருந்து 25% பிடித்துக் கொள்ளப்படும்.

sundar 1

அதேபோல மூன்றாவது முறை அதே தவறு நடக்கும் பட்சத்தில் அணியின் கேப்டனுக்கு 30 லட்சம் அபராதம் விதிப்பதோடு மட்டுமல்லாமல் அதற்கு அடுத்த போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும்.மேலும் அணியின் வீரர்களுக்கு 12 லட்சம் அபராதம் அல்லது போட்டிக்கான கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் பிடித்துக் கொள்ளப்படும் என்று பிசிசிஐ புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளது.

- Advertisement -

Jadeja

பிசிசிஐ கொண்டுவந்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை எல்லா அணி உரிமையாளர்களுக்கும் மற்றும் எல்லா அணி வீரர்களுக்கும் மிகப்பெரிய தலைவலியை உண்டாக்கி உள்ளது. இருப்பினும் போட்டி குறிப்பிட்ட நேரத்தில் முடிந்தால் தான் அது ரசிகர்களுக்கும் உற்சாகத்தை அளிக்கும் என்பதனால் பி.சி.சி.ஐ இந்த முடிவினை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.