ஐ.பி.எல் 2021 : 52 நாட்கள் நடைபெறும் ஐ.பி.எல் திருவிழா. தேதிகள் அறிவிப்பு – ரசிகர்கள் கொண்டாட்டம்

ipl trophy
- Advertisement -

14வது ஐபிஎல் லீக் தொடர் வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டு மே மாதம் 30ம் தேதி வரை வரை நடைபெற இருக்கிறது. முதல் போட்டியில் சென்ற வருட சாம்பியன் அணியான மும்பை இந்தியன்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை சந்திக்க உள்ளது. இந்த போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் ஏழு முப்பது மணி அளவில் நடைபெற உள்ளது.
மும்பை, சென்னை, பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் லீக் போட்டிகள் நடக்க இருக்கின்றன.

ipl

- Advertisement -

ப்ளே ஆப்ஸ் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடக்க இருக்கிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று மதியம் வெளியிடப்பட்ட ஐபிஎல் ஷெட்யூல் அட்டவணை ஒருபக்கம் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும் மறுபக்கம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது ஒவ்வொரு அணியும் தங்கள் ஹோம் கிரவுண்ட்களில் பாதி போட்டிகளில் விளையாடும். ஆனால் இம்முறை தலைகீழாக அது அமைந்துள்ளது.

ஒவ்வொரு அணிகளும் இந்த முறை தங்களது ஹோம் கிரவுண்ட் களில் விளையாட போவதில்லை.
மும்பை அணி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் ஐந்து போட்டிகளிலும் , சென்னை அணி மற்றும் ராஜஸ்தான் அணியும் வான்கடே மைதானத்தில் ஐந்து போட்டிகளிலும் , ஆர் சி பி மற்றும் டெல்லி கேப்பிடல் கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் ஐந்து போட்டிகளிலும் , கேகேஆர் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐந்து போட்டிகளிலும் விளையாட உள்ளன.

கொரோனா காரணமாக ரசிகர்கள் இல்லாமல் போட்டி நடத்தப்படுமா அல்லது பாதி ரசிகர்கள் மட்டும் அனுமதித்து போட்டிகள் நடத்தப்படுமா என்று ஒருபக்கம் ரசிகர்கள் ஆவலுடன் உள்ள நிலையில்மறுபக்கம் ஹைதராபாதி ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். ஏறக்குறைய எல்லா ஊர்களிலும் போட்டி நடைபெறப்போகும் வேலையில் ஹைதராபாதில் மட்டும் எந்த போட்டியும் நடைபெறப் போவதில்லை ஏன் ஹைதராபாத்தில் எந்த போட்டியும் நடைபெறப் போவதில்லை அங்குதான் கொரோனா கட்டுப்பாடுடன் உள்ளது. அங்கு ஏன் போட்டி நடத்தப்படவில்லை என்று அவரது ரசிகர்கள் பிசிசியிடம் ட்விட்டரில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதனை தவிர்த்து ஐ.பி.எல் போட்டிகள் இந்த வருடம் இந்தியாவிலே நடைபெற இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கான வரவேற்பு அதிகரித்துள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement