2023 புத்தாண்டில் இந்தியா விளையாடும் 6 அடுத்தடுத்த தொடர்களை அறிவித்த பிசிசிஐ – முழு அட்டவணை இதோ

IND
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஏமாற்ற தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக நியூசிலாந்துக்கு பயணித்து பங்கேற்ற டி20 தொடரை வென்றாலும் ஒருநாள் தொடரை இழந்தது. அதைத்தொடர்ந்து தாயகம் திரும்பிய இந்திய அணி அருகில் இருக்கும் வங்கதேசத்திற்கு பயணித்து 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதில் 2023இல் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் முதலாவதாக நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் அஜாக்கிரதையாக செயல்பட்ட இந்தியா 0 – 2* (3) என்ற கணக்கில் தொடரை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

குறிப்பாக முதல் போட்டியில் 9 விக்கெட்டுகளை எடுத்தும் கடைசி நேரத்தில் சொதப்பிய இந்தியா 2வது போட்டியில் ஆரம்பத்திலேயே 6 விக்கெட்டுகளை எடுத்தும் கத்துக்குட்டி வங்கதேசம் என்ன செய்து விடப் போகிறது என்ற மிதப்பில் செய்யப்பட்டதால் அடுத்தடுத்து அவமான தோல்விகளை சந்தித்துள்ளது. இதனால் 2022 ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பையில் சந்தித்த தோல்விகளிலிருந்து எந்த பாடங்களையும் கற்காமல் இந்தியா மோசமாக செயல்பட்டுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

- Advertisement -

6 புதிய தொடர்கள்:
இருந்தாலும் கூட ஹர்திக் பாண்டியா, ஜஸ்ப்ரித் போன்ற முக்கிய வீரர்கள் இல்லாத நிலைமையில் சந்தித்த இந்த தோல்வியால் இந்திய அணி தரம் குறைந்து விடவில்லை என்றே கூறலாம். அத்துடன் தோல்வி தான் மிகப்பெரிய வெற்றிக்கு முதல் படி என்ற அடிப்படையில் இந்த தோல்விகளால் துவண்டு விடாமல் மீண்டெழுந்து வெற்றி பாதையில் நடப்பதற்காக இந்தியா பங்கேற்கும் 3 புதிய கிரிக்கெட் தொடர்களின் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் வங்கதேச சுற்றுப்பயணம் வரும் டிசம்பர் 26ஆம் தேதியுடன் நிறைவுக்கு வருவதால் அதை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பும் இந்தியா அடுத்ததாக புதிதாகப் பிறக்கும் 2023 புத்தாண்டில் அண்டை நாடான இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அத்துடன் 2023 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடும் இந்தியா அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக மீண்டும் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

- Advertisement -

அதை தொடர்ந்து வரும் பிப்ரவரி மாதம் மீண்டும் சொந்த மண்ணில் வலுவான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்காக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இறுதியாக 2023 ஐபிஎல் தொடருக்கு முன்பாக கடைசி தொடராக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் இந்தியா விளையாடுகிறது. இந்த 3 அடுத்தடுத்த தொடர்களில் கடைசி போட்டியாக நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி தமிழகத்தின் தலைநகரான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா களமிறங்கும் கிரிக்கெட் தொடர்களின் அட்டவணை:
முதல் டி20 : ஜனவரி 3, இரவு 7 மணி, மும்பை
2வது டி20 : ஜனவரி 5, இரவு 7 மணி, புனே
3வது டி20 : ஜனவரி 7, இரவு 7 மணி, ராஜ்கோட்

- Advertisement -

முதல் ஒருநாள் போட்டி : ஜனவரி 10, மதியம் 2 மணி, கௌகாத்தி
2வது ஒருநாள் போட்டி : ஜனவரி 12, மதியம் 2 மணி, கொல்கத்தா
3வது ஒருநாள் போட்டி : ஜனவரி 15, மதியம் 2 மணி, திருவனந்தபுரம்

நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் கிரிக்கெட் தொடர்களின் அட்டவணை:
முதல் ஒருநாள் போட்டி : ஜனவரி 18, காலை 10 மணி, ஹைதெராபாத்
2வது ஒருநாள் போட்டி : ஜனவரி 21, காலை 10 மணி, ராய்ப்பூர்
3வது ஒருநாள் போட்டி : ஜனவரி 24, காலை 10 மணி, இந்தூர்

- Advertisement -

முதல் டி20 : ஜனவரி 27, இரவு 7 மணி, ராஞ்சி
2வது டி20 : ஜனவரி 29, இரவு 7 மணி, லக்னோ
3வது டி20 : பிப்ரவரி 1, இரவு 7 மணி, அகமதாபாத்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா பங்கிற்கும் கிரிக்கெட் தொடர்களின் அட்டவணை:
முதல் டெஸ்ட் : பிப்ரவரி 9 – 13, காலை 9.30 மணி, நாக்பூர்
2வது டெஸ்ட் : பிப்ரவரி 17 – 21, காலை 9.30 மணி, டெல்லி
3வது டெஸ்ட் : மார்ச் 1 – 5, காலை 9.30 மணி, தரம்சாலா
4வது டெஸ்ட் : மார்ச் 9 – 13, காலை 9.30 மணி, அகமதாபாத்

முதல் ஒருநாள் போட்டி : மார்ச் 17, காலை 10 மணி, மும்பை
2வது ஒருநாள் போட்டி : மார்ச் 19, காலை 10 மணி, விசாகப்பட்டினம்
3வது ஒருநாள் போட்டி : மார்ச் 22, காலை 10 மணி, சென்னை

Advertisement