- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தொடர்ச்சியான ஐ.பி.எல் போட்டிகளால் கூடுதல் வீரர்களை இந்திய அணியில் சேர்த்த பி.சி.சி.ஐ – காரணம் என்ன?

இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 19-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது மே 31-ஆம் தேதி நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியுடன் முடிவுக்கு வந்தது. இதற்கடுத்து இந்திய அணியானது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது.

இந்திய அணியில் கூடுதல் வீரர்களை சேர்த்த பி.சி.சி.ஐ :

இந்த இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரானது நியூ சண்டிகரில் ஜூன் 6-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது ஜூன் 14-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

- Advertisement -

இந்த இரண்டு தொடர்களுக்குமான இந்திய அணியை ஏற்கனவே இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. அதில் முன்னணி வீரர்கள் பலருக்கு ஓய்வு வழங்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்கள் சிலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இவ்வேளையில் ஐ.பி.எல் தொடர் முடிந்த கையோடு உடனடியாக இந்த தொடரானது நடைபெற இருப்பதினால் தற்போது பி.சி.சி.ஐ கூடுதலாக சில வலைப்பயிற்சி பந்துவீச்சாளர்களை இந்திய அணிக்குள் சேர்த்துள்ளது.

ஏனெனில் இந்திய அணியின் முதன்மை பந்து வீச்சாளர்கள் பலருமே ஐபிஎல் போட்டிகளில் தொடர்ச்சியாக ஓய்வின்றி விளையாடியதால் அவர்களது பணிச்சுமையை கருத்தில் கொண்டு ஆப்கானிஸ்தான் தொடருக்கு முன்னதாக அவர்களை வலைப்பயிற்சியிலும் பயன்படுத்தக் கூடாது என்று யோசித்துள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : வைபவ் சூர்யவன்ஷி வந்ததால் அவங்களோட பலமும், நம்பிக்கையும் அதிகரித்துள்ளது – சச்சின் பாராட்டு

அதன்காரணமாக தற்போது ஐ.பி.எல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட குர்ஜப்னீத் சிங், ஆகிப் நபி, பிரின்ஸ் யாதவ், சரண்ஷ் ஜெயின், ஜீஷன் அன்சாரி மற்றும் ஷிவாங் குமார் ஆகிய ஆறு பேரை வலைப்பயிற்சி பந்து வீச்சாளர்களாக அறிவித்துள்ளது. இதில் பிரின்ஸ் யாதவுக்கு இந்திய முதன்மை அணியிலும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -