இவங்க இல்லனாலும் ஐ.பி.எல் காட்டாயம் நடைபெறும் – பி.சி.சி.ஐ தரப்பில் கசிந்த தகவல்

Ganguly
- Advertisement -

கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் 29ம் தேதி துவங்க இருந்த ஐபிஎல் தொடர் தற்போது வரை நடக்கவில்லை. மேலும் இருமுறை தள்ளிவைக்கப்பட்ட இந்தத்தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டதாக கடைசியாக அறிவிக்கப்பட்டது. ஒருவேளை இந்த ஐபிஎல் தொடர் இந்த வருடம் நடக்கவில்லை என்றால் 47,000 கோடி பிரான்ட் மதிப்புள்ள ஐபிஎல் பிராண்டின் மதிப்பு 5000 கோடிகள் குறைந்து ஐபிஎல் தொடர் நட்டத்தை சந்திக்கும்.

Ipl cup

- Advertisement -

இதன்காரணமாக ஐபிஎல் நிர்வாகம் எப்படியாவது இந்த வருடத்தில் ஐபிஎல் தொடரை நடத்தி விட வேண்டுமென்று மும்முரமாக காத்திருக்கிறது. இதற்கு உலகக் கோப்பை டி20 தொடர் நடக்காமல் இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த நேரத்தைப் பயன்படுத்தி பிசிசிஐ ஐபிஎல் தொடரை நடத்த முடியும்.

இந்நிலையில் சௌரவ் கங்குலி ஐபிஎல் தொடர் குறித்து மாநில கிரிக்கெட் வாரியங்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் ரசிகர்கள் இல்லாமலும் ஐபிஎல் போட்டியை நடத்த தயாராகுங்கள். அதே நேரத்தில் இந்த வருடம் ஐபிஎல் தொடரை நடத்த நாம் அனைவரும் அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.

IPL-1

ரசிகர்கள் மட்டுமல்லாது ஐபிஎல் அணிகள் வெளிநாட்டு வீரர்கள், பங்குதாரர்கள், ஸ்பான்சர்கள் என அனைவரும் ஐபிஎல் தொடரை நடத்தி விட வேண்டுமென்று மும்முரமாக காத்திருக்கின்றனர். வெளிநாட்டு வீரர்களும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க ஆர்வமாக இருக்கின்றனர்.

- Advertisement -

Ganguly

இதன் காரணமாக ஐபிஎல் தொடரை நடத்துவது குறித்து விரைவில் முடிவு எடுத்து அறிவிக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருவதாக கங்குலி தெரிவித்துள்ளார். அவர் கூறியபடி பார்த்தால் இந்த வருடம் இன்னும் சில மாதங்களில் ஐபிஎல் தொடர் நடத்தப்படும் என்பது உறுதியே.

இந்நிலையில் ஐபிஎல் நிர்வாகக் குழு தலைவர் பிரிஜேஷ் பட்டேல் செப்டம்பர்-அக்டோபர் மாதத்தில் ஐபிஎல் தொடரை நடத்த ஆயத்தமாகி உள்ளதாகவும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஐபிஎல் அணிகளிடம் தாம் பேச இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்த தொடர் தொலைக்காட்சியில் மட்டுமே ஒளிபரப்பாகும் என்றும் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க வேண்டும் என்று என்றுதான் நினைத்தோம். ஆனால் இந்தி வீரர்களை மட்டுமே வைத்து தொடரை நடத்த முடியாது என்று கூட பேசி இருந்தார்.

இந்நிலையில் தற்போது இந்த விவகாரம் குறித்து ஐபிஎல் அணிகள் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டு வீரர்கள் விளையாடினால் தான் ஐபிஎல் சிறப்பாக இருக்கும் என்ற கருத்தினை அனைத்து அணி நிர்வாகங்களும் முன்வைத்து வந்தனர். ஆனால் வெளிநாட்டு வீரர்கள் இல்லாமலும் இந்த தொடரை நடத்த பிசிசிஐ ஆயத்தமாகி வருவதாக மறைமுகமான தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement