ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து வீரர்களுக்கு சிறப்பு சலுகை அளித்த பி.சி.சி.ஐ – எதுக்காகன்னு பாருங்க

BCCI
- Advertisement -

உலகெங்கிலும் மார்ச் மாதம் முதல் தனது கோர தாண்டவத்தை காட்டிவந்த கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் மார்ச் மாதம் 29 ஆம் தேதி துவங்க இருந்த பதின்மூன்றாவது ஐபிஎல் தொடர் பலமுறை தள்ளிவைக்கப்பட்டு இறுதியில் இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு முற்றிலுமாக மாற்றப்பட்டது. மேலும் செப்டம்பர் 19-ம் தேதி இந்த தொடர் துவங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

ipl

- Advertisement -

இந்த அறிவிப்புக்கு பின்னர் கிரிக்கெட் ரசிகர்கள் முகத்தில் மீண்டும் புன்னகை வந்தது. தற்போது கடந்த நான்கு ஐந்து மாதங்களாக பல்வேறு துன்பங்களை அடைந்து வந்த மக்கள் தற்போது இந்த தொடர் மூலம் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புவார்கள் என்று பலரும் கூறி வருகின்றனர். அந்த வகையில் தற்போது நாளை சென்னை மற்றும் மும்பை ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி துவங்க உள்ளது.

இந்த தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் கடந்த மாதம் ஐக்கிய அரபு அமீரகம் சென்று ஆறு நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு பிறகு பயிற்சியில் ஈடுபட்டு தற்போது போட்டிக்காக தயாராகி உள்ளனர். இந்நிலையில் இதுவரை ஐக்கிய அரபு அமீரகம் வராமல் இருந்த ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் இருநாட்டு தொடர் முடிவடைந்த பின்னர் தற்போது ஐக்கிய அரபு அமீரகம் திரும்பியுள்ளனர்.

Forign

வழக்கமாக ஆறு நாட்கள் தனிமைப்படுத்தப்படும் நிலை இருக்கும் இவ்வேளையில் அவர்களுக்கு 36 மணி நேரம் தனிமைப்படுத்தல் போதுமானது என்று பிசிசிஐ கூறியுள்ளது. அவர்களுக்காக இந்த சலுகையை கொடுத்ததன் காரணம் யாதெனில் ஏற்கனவே இரு நாடுகள் கலந்துகொண்ட போட்டியில் அவர்கள் முற்றிலும் பாதுகாப்பான முறையிலேயே கிரிக்கெட் விளையாடினார்கள்.

- Advertisement -

மேலும் அந்த தொடருக்கு முன்னரும் வீரர்கள் தனிமைப்படுத்திக் கொண்டதால் தற்போது அவர்களின் பாதுகாப்பில் பெரிய பிரச்சனை இல்லை என்றும் மேலும் இத்தொடருக்கு முன்பாகவே அவர்கள் பிசிசியிடம் தங்களது தனிமைப்படுத்தப்படும் நாட்களை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

Bairstow

தற்போது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய வீரர்களை ஐக்கிய அரபு அமீரகத்தில் 36 மணி நேரம் மட்டும் ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டு மீண்டும் அணியுடன் இணையலாம் என்று புதிய சலுகையை பிசிசிஐ அளித்துள்ளது. இதனால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படாது என்றும் இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்பு விதிமுறைகள் ஆகியவற்றை அவர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement