IPL 2022 : ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்கவைக்கலாம் – பி.சி.சி.ஐ எடுத்த சூப்பர் முடிவு

IPL-1
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு துவங்கிய ஐபிஎல் தொடரானது தற்போது 14 – சீசன்களை நிறைவு செய்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தினை கைப்பற்றியது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 14 சீசன்களில் ஐபிஎல் கோப்பையை மும்பை அணி 5 முறையும், சென்னை அணி 4 முறையையும் கைப்பற்றி அசத்தியுள்ளனர்.

Dhoni-3

- Advertisement -

இந்நிலையில் அடுத்த ஆண்டு ஏற்கனவே விளையாடும் 8 அணிகள் உடன் சேர்த்து புதிதாக இரண்டு அணிகள் இணைக்கப்பட்டு 10 அணிகள் விளையாடும் என பிசிசிஐ ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி புதிய 2 அணிகளுக்கான ஏலம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் துபாயில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய நகரங்களை தலைமையாகக் கொண்டு புதிதாக இரண்டு அணிகள் உருவாக்கப்பட்டது.

இந்நிலையில் அடுத்த ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் டிசம்பர் மாதம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்பது குறித்தும் பிசிசிஐ தங்களது விளக்கத்தை அளித்துள்ளது. அதன்படி ஒவ்வொரு அணியும் தலா 4 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

ipl-2020

அதில் 2 இந்திய வீரர்கள், 2 வெளிநாட்டு வீரர்கள் அல்லது 2 இந்திய வீரர்கள், 2 வெளிநாட்டவர் என்ற அடிப்படையில் எப்படி வேண்டுமென்றாலும் தக்கவைத்துக் கொள்ளலாம். மேலும் புதிதாக இணைந்துள்ள லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் ஏலப்பட்டியலில் இடம் பெறும் வீரர்களில் இருந்து மூன்று வீரர்களை ஏலத்திற்கு முன்பாக நேரடியாக எடுத்துக் கொள்ளலாம் என்ற சலுகையும் வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : கேர் லெஸ்ஸா இருக்காதீங்க. அவங்களும் டேஞ்சர் தான் – இந்திய அணியை எச்சரித்த ஜாஹீர் கான்

அதுமட்டுமின்றி வழக்கமாக ஒவ்வொரு முறையும் ஏலத்தின்போது அணிகள் 85 கோடி ரூபாய் வரை செலவு செய்ய அனுமதிக்கப்பட்டன. ஆனால் இம்முறை அந்தத்தொகை 90 கோடியாக உயர்த்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement