- Advertisement -
உலக கிரிக்கெட்

வங்கதேச அணியில் இருந்து நீக்கப்பட இருக்கும் ஷாகிப் அல் ஹசன்.. அதிகரித்த சிக்கல் – என்ன நடந்தது?

வங்கதேச நாட்டில் அண்மையில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர் அமைப்பினர் நடத்திய புரட்சி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தப் போராட்டம் வன்முறையாக மாறி அந்த வன்முறையில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் சிலர் இந்த வன்முறையின் போது காணாமல் போனதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

ஷாகிப் அல் ஹசன் மீது வழக்கு :

இதன் காரணமாக வங்கதேச நாட்டின் பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசினா அங்கிருந்து இந்தியா வந்து தஞ்சம் அடைந்துள்ளார். அதன் காரணமாக அவரது பிரதமர் பதவி பறிக்கப்பட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தற்போது ராணுவத்தின் கண்காணிப்பில் இடைக்கால அரசு அமைந்துள்ளது.

- Advertisement -

இதனிடையே ஷேக் ஹசினா மீதும் அவர்கள் கட்சியை சேர்ந்த 147 பேர் அடங்கிய நிர்வாகிகள் மீதும் கொலை வழக்கு, போராட்டத்தை முறியடிக்க சதி திட்டம் என பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த கொலை வழக்கில் 147 பேர் கொண்ட குற்றவாளிகள் பட்டியலில் 28-வது குற்றவாளியாக வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷாகிப் அல் ஹசனையும் இணைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். ஏனெனில் சாகிப் அல் ஹசன் கிரிக்கெட் வீரராக மட்டுமின்றி அந்நாட்டு மாநிலங்களவை உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

இந்த வன்முறையில் அவரும் தொடர்பு இருக்கிறது என்று கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது நீதிமன்றத்தில் இந்த விசாரணை நடப்புக்கு வந்துள்ளதால் அவர் மீது சிக்கல்கள் அதிகரித்துள்ளன. மேலும் தற்போது வங்கதேச உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் விடுத்துள்ள நோட்டீஸில் தற்போது ஷாகிப் அல் ஹசன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர் வங்கதேச அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு விரைவில் நாடு திரும்ப வேண்டும் என்றும் அதன் பின்னர் அவர் கோர்ட் விசாரணையில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் வழக்கறிஞர் நோட்டீஸ் விட்டுள்ளார்.

இதையும் படிங்க : எங்க டீமுக்கு வந்தா நீங்கதான் எங்க டீமோட கேப்டன்.. சூர்யகுமார் யாதாவிற்கு ஆபருடன் அழைப்பு விடுத்த – ஐ.பி.எல் அணி

அதன் காரணமாக தற்போது பாகிஸ்தானில் இருந்து வரும் அவர் விரைவில் நாடு திரும்பி நீதிமன்ற வழக்கில் பங்கேற்பார் என்று தெரிகிறது. இருப்பினும் வங்கதேச நிர்வாகம் அவர் அணியில் இருந்து வெளியேறுவது குறித்த எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

- Advertisement -