எங்களது முடிவில் மாற்றம் இல்லை.. நாங்க டி20 உலககோப்பையில் விளையாட வரமாட்டோம் – வங்கதேச வாரியம் அறிவிப்பு

BCB
- Advertisement -

எதிர்வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் மார்ச் 8-ஆம் தேதி வரை ஐ.சி.சி-யின் பத்தாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடருக்கான அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேளையில் எந்த அணி இறுதிப்போட்டி வரை சென்று கோப்பையை கைப்பற்றும்? என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

எங்களது முடிவில் மாற்றம் இல்லை : வங்கதேச வாரியம் அறிவிப்பு

இந்நிலையில் இந்த டி20 தொடரில் பங்கேற்கும் நிலைப்பாட்டை மாற்ற நாங்கள் தயாராக இல்லை என்றும் இந்தியாவில் இந்த தொடர் நடந்தால் நாங்கள் பங்கேற்க போவதில்லை என்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஏனெனில் ஐபிஎல் தொடரில் கே.கே.ஆர் அணியில் இடம் பெற்றிருந்த வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான் அதிரடியாக ஐ.பி.எல் தொடரில் இருந்து நீக்கப்பட்டார்.

- Advertisement -

இதன் காரணமாக அந்நாட்டில் எதிர்ப்பு அதிகரித்தது. ஏற்கனவே வங்கதேச நாட்டில் இந்து மக்களின் மீதான அத்துமீறல் காரணமாக வங்கதேச வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடக்கூடாது என்ற கோரிக்கை இந்தியாவில் வலுத்ததால் முஸ்தபிசுர் ரஹ்மான் ஐ.பி.எல் தொடரிலிருந்து நீக்கப்பட்டார். அப்படி அவர் நீக்கப்பட்டதும் இனி இந்தியாவில் நாங்கள் விளையாட மாட்டோம் என்று வங்கதேச வாரியம் முடிவு செய்தது.

இதன் காரணமாக ஐசிசி-யிடம் முறையிட்ட அவர்கள் டி20 உலக கோப்பை தொடரில் தங்களது அணி விளையாடும் போட்டிகளை இடம் மாற்றுமாறு கேட்டுக் கொண்டது. ஆனால் ஐசிசி தீவிர விசாரணைக்கு பிறகு அட்டவணை அறிவிக்கப்பட்ட பின்னர் எங்கும் போட்டிகளை மாற்ற முடியாது என்றும் இந்தியாவில் வந்து விளையாடுமாறு கட்டளை விடுத்தது.

- Advertisement -

அதோடு அப்படி நீங்கள் இந்தியா வந்து விளையாடவில்லை என்றால் வேறு ஒரு அணியை சேர்த்துக் கொள்வோம் என்றும் திட்டவட்டமாக அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தங்களது இறுதி முடிவை வெளியிட்ட வங்கதேச வாரியம் : ஐசிசி எங்கள் மீது அழுத்தத்தை கொடுக்க முயன்றால் அந்த நிபந்தங்களை நாங்கள் ஏற்க மாட்டோம்.

இதையும் படிங்க : சந்தைல கிடைக்காத ஃபேஷன்.. தனியாளா 10 பேரை சமாளிக்கும் கோலி.. இனிமேல் அங்க ஆட அவசியமில்ல.. கைஃப் பேட்டி

கடந்த காலங்களில் பாகிஸ்தான் நாட்டிற்கு இந்தியா பயணம் செய்யாது என்று கூறிய போது ஐசிசி இடமாற்றி இருந்தது. ஆனால் தற்போது எங்களது கோரிக்கைகளை அவர்கள் ஏற்கவில்லை. இது நியாயமற்ற ஒரு செயல் எனவே நாங்கள் இந்தியாவில் நடைபெறவிருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க மாட்டோம் என வங்கதேச வாரியம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement