ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பை வரும் பிப்ரவரி 7ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் துவங்குகின்றது. அத்தொடரில் இந்தியாவுக்கு சென்று விளையாட முடியாது என்று அறிவித்துள்ள வங்கதேச வாரியம் தங்களது போட்டிகளை இலங்கையில் நடத்துமாறு ஐசிசிக்கு கோரிக்கை வைத்துள்ளது. சமீபத்தில் வங்கதேசத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் சில இந்து மக்கள் இயற்கை எழுதியதாக செய்திகள் வெளிவந்தன.
அதற்கு பதிலடியாக இந்தியாவின் நடைபெறும் ஐபிஎல் தொடரில் வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான் விளையாடக்கூடாது என்று இங்குள்ள அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் பிசிசிஐ அறிவுறுத்தலின் பெயரில் 9.20 கோடிக்கு வாங்கிய ரஹ்மானை கொல்கத்தா தங்களுடைய அணியிலிருந்து விடுவித்தது. அதற்கு பதிலடியாகவே இந்தியாவுக்கு வரமாட்டோம் என்று அறிவித்துள்ள வங்கதேசம் தங்களுடைய நாட்டில் ஐபிஎல் தொடரை ஒளிபரப்பவும் தடை விதித்துள்ளது.
இந்தியாவை எதிர்த்து:
இதற்கிடையே வங்கதேச போட்டிகளை இலங்கை நடத்துவதில் பெரிய சிக்கல்கள் இருப்பதாக ஐசிசி கருதுகிறது. எனவே ஒன்று இந்தியாவில் விளையாடுங்கள் அல்லது புள்ளிகளை இழக்கத் தயாராகுங்கள் என்று ஐசிசி வங்கதேசத்திற்கு பதிலளித்துள்ளது. அதற்கு 2027 வரை வங்கதேசத்திற்கு நிதி வழங்கும் ஒப்பந்தத்தை ஐசிசி 2022லேயே கையெழுத்து இட்டுவிட்டதாக வங்கதேச வாரியத்தின் இயக்குனர் நஜ்முல் இஸ்லாம் தெரிவித்தார்.
அதனால் 2026 டி20 உலகக் கோப்பையிலிருந்து வங்கதேசம் வெளியேறினால் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று இஸ்லாம் கூறினார். அதே சமயம் உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடாவிட்டால் வங்கதேச வீரர்களுக்கு சம்பளம் கிடைக்காது என்றும் அவர் கூறினார். அதற்காக வாரியத்தின் சார்பில் வீரர்களுக்கு எந்த இழப்பீடும் வழங்கப்படாது என்றும் அவர் கூறினார்.
இரண்டான வங்கதேசம்:
அத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் பல வருடங்களாகியும் ஐசிசி உலகக் கோப்பை போன்ற பெரிய வெற்றிகளை பெற்றுக் கொடுக்கத் தவறிய வங்கதேச வீரர்கள் சம்பளத்தைப் பெறுவதற்கு தகுதியானவர்கள் அல்ல என்றும் அவர் கூறியது சர்ச்சையை உண்டாக்கியது. அதனுடைய எதிரொலியாக 2026 வங்கதேச பிரிமியர் லீக் தொடர் ஜனவரி 15ஆம் தேதி தாக்காவில் துவங்கியது. அத்தொடரின் முதல் நாளில் நடைபெறவிருந்த 2 போட்டிகளையும் வங்கதேச வீரர்கள் புறக்கணித்து விட்டார்கள்.
அத்துடன் மேற்கொண்டு விளையாட வேண்டுமெனில் தங்களை தரைக்குறைவாக பேசிய நஜ்முல் பதவி விலக வேண்டும் என்றும் வங்கதேச வீரர்களின் நல்வாழ்வு அமைப்பு போர்க்கொடி உயர்த்தியது. அவர்களிடம் வங்கதேச வாரியம் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. அதனால் நஜ்முலை இயக்குனர் பதவியிருந்து நீக்குவதாக வங்கதேச வாரியம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஐசிசி அண்டர்-19 உ.கோ: மழையை தாண்டி அமெரிக்காவை சாய்த்த இந்தியா.. ஹெனில், குண்டு அசத்தல்
ஆனால் அப்போதும் பொதுவெளியில் மன்னிப்பு கேட்காத வரை வங்கதேசத்தில் எந்த போட்டிகளிலும் விளையாட மாட்டோம் என்று அந்நாட்டு வீரர்கள் அறிவித்துள்ளார்கள். இதிலிருந்து இந்தியாவை எதிர்த்து வங்கதேச கிரிக்கெட் இன்று இரண்டாக பிளவுப்பட்டுள்ளது என்றால் மிகையாகாது.



